தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பாறுதல், பெயர்ச்சொல்.
  1. அழிதல்
    (எ. கா.) பழம்வினைகள் பாறும்வண்ணம் (திருவாச. 51, 1)
  2. சிதறுதல்
    (எ. கா.) ஆவி வானிற் காலொடு பாறி (அகநா.9)
  3. நிலைக்கெட்டோடுதல் (பிங். .)
    (எ. கா.) அனுமன் பாறினன் (கம்பரா. கும்பக. 182)
  4. கிழிபடுதல்
    (எ. கா.) பாறிய சிதாரேன் (புறநா. 150)
  5. அடிபறிதல் (யாழ். அக. )
  6. ஒழுங்கற்றுப் பரந்துகிடத்தல்
    (எ. கா.) செம்முக மந்தி . . . பாறுமயிர் திருத்தும் (நற். 151)
  7. பொருதல் (யாழ் . அக.)
  8. கடத்தல் (திவா.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To be destroyed, ruined
  2. To be scattered
  3. To run, flee
  4. To be torn into pieces
  5. To give way to be uprooted
  6. To be in disorder to be dishevelled
  7. To fight
  8. To cross, pass over


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாறுதல்&oldid=1253773" இலிருந்து மீள்விக்கப்பட்டது