பிராயன் பால்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Streblus Asper--(தாவரவியல் பெயர்)--extracted milk
பிராயன் பால், .
பொருள்
தொகு- பிராயன் மூலிகையின் பால்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- milk of
- siamese rough bush
- khoi
- serut
- toothbrush tree
விளக்கம்
தொகு- இந்தியா, தாய்லாந்து, மலேசியா, வியத்னாம் நாடுகளிலுள்ள வறண்டப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட மருத்துவ குணமுள்ள ஒரு சிறியவகை மரம் பிராயன்...தாய்லாந்தில் காகிதம் தயாரிக்கப் பயன்பட்டது...இந்தவகைக் காகிதங்கள் தட்பவெப்ப நிலையால் பாதிக்கப்படாது...பழம் புத்தமதச் சுவடிகளும்,அரசு ஆவணங்களும் இந்த வகைக் காகிதத்திலேயே எழுதப்பட்டன...தற்காலத்தில் வேறு பொருட்களால் காகிதம் தயாரிக்கப்பட்டாலும் இன்றளவும் கைவினைக் கலைஞர்கள் தங்கள் தேவைக்கு பழைய முறையிலேயே காகிதம் தயாரித்துக் கொள்ளுகிறார்கள்...
- வியத்னாம் நாட்டில் பாரம்பரியமான மரவேலைகளில் இம்மரத்து இலைகளையே மரங்களைச் சுத்தம் செய்ய உப்புக்காகிதமாகப் பயன்படுத்துகிறார்கள்...
மருத்துவ குணங்கள்
தொகு- பிராயன் பாலால் பல்வலி, பித்தவெடிப்பு குணமாகும்...விந்து வன்மை பெறும்...
பயன்படுத்தும் முறை
தொகு- பிராயன் பாலைப் பாதங்களிலும், கைகளிலும் வரும் பித்த வெடிப்பிற்குத் தடவிவர விரைவில் ஆறும்...மூல முளைக்குத் தடவிவரச் சுருங்கும்...பற்களைத் தேய்த்தால் பல்லாட்டம், பல்வலி, ஈறுசுரப்பு முதலியன போகும்...
- பிராயன் பாலை, வறுத்தக் கடலைமாவுடன் சேர்த்துப் பிசைந்து பட்டாணி அளவு சிறு மாத்திரைகளாகச் செய்து உடற்வலிமைக்குத் தக்கவாறு ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகள், தினமும் இரண்டு வேளை, சில நாள் சாப்பிட்டுவரப் புணரும் சக்தியை உண்டாக்கும்...