புளிச்சக்கீரை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
Hibiscus cannabinus...(தாவரவியல் பெயர்)
புளிச்சக்கீரை, .
பொருள்
தொகு- ஒரு புளிப்புச்சுவை மிகுந்த கீரை வகை.
- செடிக் காசரைக் கீரை.
- புளிசிறுகீரை
- கோங்கூரா தெலுங்கு..சென்னைப் பகுதிகளில் இந்தப்பெயராலேயே அறியப்படுகிறது
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- Kenaf
- A sour leafy vegetable
விளக்கம்
தொகு- (புளித்த)புளிச்ச + கீரை = புளிச்சக்கீரை...ஆந்திர மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படும் 'கோங்கூரா'என்னும் இந்தக் கீரை மிகுந்த புளிப்புச் சுவையுடையது...கீரையை நறுக்கி, துவரம்பருப்போடுச் சேர்த்து, வேகவைத்துக் கடைந்து தாளிதம்செய்து கோங்கூரா பப்பு என்னும் குழம்பாகவும் அல்லது 'பச்சடி' என்னும் தொக்காகவும் செய்து உண்பார்கள்....அதிலும் ஆந்திராவின் குண்டூர் பகுதியில் விளையும் புளிச்சக்கீரை மிகச்சிறப்பானது..ஆவக்காய் ஊறுகாயும், கோங்கூரா தொக்கு அல்லது பப்புவும் ஆந்திராவின் கலாச்சாரச் சின்னமாகவே இருந்துவருகிறது...மிகுந்த மருத்துவ குணங்கள் அடங்கிய கீரை...
மருத்துவ குணங்கள்
தொகு- இந்தக்கீரையால் கபம் ஒழியும்...பித்தத்தால் ஏற்பட்ட அரோசிகத்தையும் மயக்கத்தையும் நீக்கும்...உடற்சூடு குறையும்...தாது பலம் & விருத்தி, தீபனம் உண்டாகும்...சிணுக்கிருமல், காயசித்தி, புணர்ச்சியில் விருப்பம் உண்டாகும்...