பூந்தாழம்பழம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Ananas Sativus - Fruit...(தாவரவியல் பெயர்)
பூந்தாழம்பழம்
பொருள்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகுவிளக்கம்
தொகு- பூந்தாழம்பழம் ஆண்டுக்கு ஒரு முறை அதற்கு உரித்தான காலத்திலேயே மிகுதியாகக் கிடைக்கும்...இப்பழங்களை சில காலம் வரையில் கெடாமலிருக்க என்ன பக்குவம் செய்தாலும், அதற்குண்டான குணம் கெடும்...
மருத்துவ குணங்கள்
தொகு- பூந்தாழம்பழத்தால் பிரமேகம், வெள்ளை, வமனம், பித்தநோய், தாகம், வாந்தி, அரோசிகம், சிரஸ்தாபரோகம் இவைகள் போகும்...அழகு உண்டாகும்...
பயன்பாடுகள்
தொகு- பூந்தாழம்பழத்தின் மேல்தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி இடித்துச் சாறு பிழிந்து அதற்குச் சமனெடை சர்க்கரை சேர்த்து சர்பத்தாகக் காய்ச்சி வைத்துக்கொள்ளலாம்...இந்த சர்பத்தில் வேளைக்கு ஒரு தோலா வீதம் தினம் இரண்டு வேளை பருகிவர மேற்கண்டப் பிணிகள் நிவர்த்தியாகும்...தேகம் அழகு பெறும்...பழங்களையும் மேல்தோல் நீக்கி அரிந்து உண்ணலாம்....இப்பழங்கள் நல்ல இன்சுவையும், நறுமணமும் கொண்டவைகள்...இப்பழங்களை மழை, குளிர் காலங்களில் உண்ணாதிருத்தல் நன்று