பேச்சு:сердце
செந்தி, "பிறமொழிகளில்" என்னும் பகுதி தமிழ் விக்சனரியில் தருவதில்லை. ஆங்கில விக்கியில் போய் сердце என்னும் சொல்லைப் பார்த்தால் அதற்கான ஆங்கிலச் சொல் தெரியும். மேலும் நீங்கள் உருவாக்கியிருக்கும் இந்தப் பக்கத்திலேயே ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளுக்கான பக்கங்களின் இணைப்பு இடது பக்கப் பட்டியில் தானியங்கியாய் சேர்க்கப்பட்டுவிடும். எடுத்துக்காட்டாக papillon என்னும் சொல்லைப் பாருங்கள். அங்கே இடப்புறத்தில் எத்தனை மொழிகளுக்கான பக்க இணைப்புகள் இருக்கின்றன என்று பாருங்கள் அவற்றை நான் சேர்க்கவில்லை Interwicket என்னும் தானியங்கி சேர்த்துவிட்டது. ஆகவே сердце என்பதற்கு தமிழ்ச்சொல்(/கள்) என்ன, அதற்கான விளக்கங்கள் என்ன என்பதைத் தருவது மட்டுமே நம் கடமை. இப்படித்தான் அவ்வவ் மொழி விக்சனரியர்கள் செய்கிறார்கள். ஆகவே பிறமொழிகளில் என்னும் பகுதியை நீக்கலாம் என்பது என் பரிந்துரை. தமிழ் மொழிச்சொற்களுக்கு மட்டுமே நாம் பிறமொழிபெயர்ப்புகள் தரவேண்டும். ஆனால் сердце என்னும் இதே எழுத்துக்கோவை உக்கிரைன் மொழியிலோ, செர்பிய மொழியிலோ அதே பொருளிலோ, வேறு பொருளிலோ இருந்தால், அது தனிப்பகுதியாக இதே பக்கத்தில் அடுத்தடுத்து அமைத்துக் கொடுக்கப்படும். நம் விக்சனரியில் முதற்பக்கத்தில் கட்டம் கட்டி " ஒரு சொல்லுக்கான வேற்று மொழி விளக்கத்தைக் காண அம்மொழி விக்சனரியைப் பார்க்கவும்" என்னும் அறிவிப்பு இருப்பதையும் பார்க்கலாம். இதில் கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.--செல்வா 12:55, 9 செப்டெம்பர் 2010 (UTC)