மாகிர், தமிழ் எழுத்துகளில் கிதாப் என்று எழுதின்னால் kidhaab என்று படிக்க நேரும். எளிதாக உள்ளதுதான். ஆனால் ஒலிப்புத் துல்லியம் காட்ட அரபி ஒலிப்புக் குறிகள் என்னும் பக்கத்தில் உள்ள குறிகளால் குறிக்கலாமா என்று கூறுங்கள். அரபி எழுத்துகளை வலமிருந்து இடமாகப் படிக்க வேண்டும் என்னும் குறிப்பையும் இடலாம். கடைசி எழுத்து (வலமிருந்து இடமாகப் படிக்கும்பொழுது) ب (பா3) வா, அல்லது پ (பா1). அரபியில் பொதுவாக வல்லின پ வராதுதானே? Pepsi என்பதைப் பெ3பூ3சி என்பது போல ஒலிப்பார்கள் என்று சில நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.--செல்வா 15:22, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

அரபி மொழி பற்றிய குறிப்பில் வலமிருந்து இடம் படிக்கவேண்டும் போன்ற குறிப்புகள் கொடுக்கலாம். ڤ FHA, پ PA, (BA அல்ல) இவைகள் உருது எழுத்துக்கள். உருது எழுத்துக்களை அரபி உச்சரிப்பிற்காக பயன்படுத்துவது சரியா என்று தெரியவில்லை. தேவைப்பட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டு எழுதுகிறேன். -- Mahir78 16:08, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

மாகிர், சொல் அரபி என்று குறிப்பிட்டிருந்ததாலேதான் அப்படி நான் கேட்டேன். இது உருதுச்சொல்லா? உருதுக்கும், இதே போல ஒன்றை ஆக்கலாம், அல்லது அரபிக்கும் உருதுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளையும், அரபிக்கும் பாரசீகத்துக்கும் உள்ள வேறுபாடுகளையும் குறிக்கலாம். வல்லின பகரமா மெல்லொலி பகரமா என தெளிவாக புரிந்துகொள்வது கடினமாக உள்ளது :)--செல்வா 17:27, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

Start a discussion about كتاب

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:كتاب&oldid=778845" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "كتاب" page.