பேச்சு:

Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

(அவிலுள்ள சுழி இல்லாவிட்டால், அது 8) - பொருள் என்ன? எனக்கு விளங்கவில்லை? --செல்வா 18:25, 9 மே 2010 (UTC)Reply

  • அந்த 8க்குரிய சுழி இல்லா அமைப்பை தேடினேன். விரைவில் அதற்குரிய படத்தை உருவாக்குகிறேன்.த*உழவன் 14:54, 26 மே 2010 (UTC)Reply
அவில் உள்ள சுழி இல்லாமல் இருக்க வேண்டும் என்று எங்கு சொல்லியுள்ளது என்பதற்குச் சுட்டு தந்தால் போதும். அ என்னும் எழுத்தே எட்டு எண்ணின் குறி என்பதாகவே நான் அறிந்தது. நீங்கள் இதற்கான விளக்கம் தரும்வரை உங்கள் விளக்கத்தை நீக்கிவிடுகின்றேன்.--செல்வா 01:27, 13 டிசம்பர் 2010 (UTC)
ஆதாரங்கள் என்ற பகுதியில் சென்னைப் பேரகரமுதலியைப் பார்க்கவும். ஏன் இந்த அவசரம்?--த*உழவன் 01:56, 13 டிசம்பர் 2010 (UTC)
"அவசரம்" எல்லாம் ஏதும் இல்லை! தவறான கருத்தாக இருந்தால் உடனே நீக்குவது நல்லது. தக்க சான்றுகோள் இருந்தால் சேர்ப்பது எளிதுதானே. சென்னைப் பேரகரமுதலியில் ஆங்கிலத்தில் இக்கருத்தைக் குறித்துள்ளார்கள் (ஏன் தமிழில் குறிக்கவில்லை என்பது வியப்பாக உள்ளது). ஆனால் பிற அகராதிகளில் இதற்கான சான்று உள்ளதா என்று நோக்க வேண்டும். நான் இப்படிக் கூறுவதற்குக் காரணம், தமிழ் உயிரெழுத்து அ என்பதும் சுழியில்லாமல் எழுதியதுண்டு (பார்க்கவும்). சென்னைப் பேரகராதியில் ஆங்கிலத்தில் இப்படி ஒரு குறிப்பு உள்ளது என்று குறிப்பிடலாம் (பிற அகராதிகள் பலவற்றில் இல்லை என்றும் குறிப்பிடலாம்). தமிழ்க் கணக்கு நூல் பற்றியும், எண்கள் மற்றும் கீழ்வாய் எண்கள் பற்றியும் குறிப்புகள் பிற இடங்களிலும் உள்ளன. அதில் சிறப்பாக (வடிவமம் பற்றி) ஏதும் விதிகள் தந்துள்ளார்களா என நோக்கலாம். நன்றாக உறுதி செய்தபின் கருத்தை இடலாம், அல்லது சென்னைப் பேரகராதியில் மட்டும் குறிக்கப்பெற்ற கருத்து என எழுதலாம். --செல்வா 04:18, 13 டிசம்பர் 2010 (UTC)

பார்த்தேன். ஃ என்பது இ என்பதனைக் குறிப்பதையும் கண்டேன்.மகிழ்ந்தேன்.ஆராய்வோம். வாழ்வியல் பொருளாதாரக் காரணங்களினால் பல அறிஞரை காணும் நோக்கை தள்ளிப் போட்டுக்கொண்டே உள்ளேன். சென்னைப் பேரகரமுதலியைப் பற்றி பாவணார் கூறியவைகளில் இக்குறையும் ஒன்று என்பதனை இப்பொழுது உணருகிறேன். பழைய தமிழ் நூல்களில் பக்கத்தைக் குறிக்க, தமிழ் எண்களைப் பயன்படுத்துவதைக் கண்டிருக்கிறேன். அதில் இந்த 8 எண்ணைத் தேடுகிறேன். நான் இருக்கும் இடத்தில் இருந்து, 250கி.மீ.தூரத்தில், பல அரிய தமிழ் நூல்கள் நூலகத்தில் உள்ளன. அவற்றில் சிலவற்றையாவது ஆவணப்படுத்த முயற்சிகளை எடுக்க வேண்டும். மின்வருடி மூலம் மின்னூலாக்குவது சிரமமாக உள்ளது. பக்கத்தாள் உடைந்து விடுகிறது. நிழற்படக்கருவி மூலம் படமெடுத்து மின்னூலாக்கும் முறையைக் கற்க வேண்டும். ஒரு நூலை மின்னூலாக்க எனது 10 நாள் வருமானத்தை இழக்க வேண்டியிருக்கும் என்பதால் தள்ளிப் போட்டு வருகிறேன். இந்த அகரமுதலியையாவது மின்னூலாக்க வேண்டும். பார்ப்போம்.--த*உழவன் 05:38, 13 டிசம்பர் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அ&oldid=1912886" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அ" page.