பேச்சு:அஃகுப்பெயர்

acronym = அஃகுப்பெயர் - பெயர்விளக்கம் - http://groups.google.com/group/tamil_wiktionary/browse_thread/thread/2c9c1a9116cc0775

என்ற பக்கத்தில் இருந்து இராம.கி பரிந்துரை கீழே.




1943 coinage from acro-, comb. form of Gk. akros "tip, end" (see acrid) + Eng. -onym "name" (abstracted from homonym; see name). The practice was non-existent before 20c. except in cabalistic esoterica and acrostic poetry.

அதே வலைத்தளத்தில் acrid என்ற சொல்லுக்கு விளக்கம் அளித்து PIE வேரையும் சுட்டிக் காட்டியிருப்பார்கள்.

1712, from L. acer (fem. acris) "sharp, pungent, bitter, eager, fierce," from PIE *ak-ri-, from base *ak- "be sharp, rise (out) to a point, pierce" (cf. Oscan acrid "sharply;" Gk. akis "sharp point," akros "at the farthest point, highest, pointed," akantha "thorn," akme "summit, edge;" also oxys "sharp, bitter;" Skt. acri- "corner, edge," acani- "point of an arrow," asrih "edge;" Lith. asmuo "sharpness," akstis "sharp stick;" O.Ir. er "high;" Welsh ochr "edge, corner, border;" O.N. eggja "goad;" O.E. ecg "sword"). The -id suffix probably is in imitation of acid.

இதைப் படித்தவுடன், சட்டென்று நினைவுக்கு வருவது திருநெல்வேலிப் பக்கத்துச் சொல்லான அஃகம் என்பதும், சிவநெறியினர் போட்டுக் கொள்ளும் அக்கமணி மாலையும், கூர்மை மற்றும் ஓரப் பொருள் தரும் அஃகு என்ற சொல்லும் தான். அஃகின் வேர்ச்சொல் அல் என்பதே. அல்லுதல் என்பது குறுகுதல், சுருங்குதல், குறைதல், நுணுகுதல் ஆகிய பொருட்பாடுகளைக் குறிக்கும்.

அல்கு>அஃகு என்ற சொல்லிற்கு குறுகியது, சுருங்கியது, குறைந்தது, நுணுகியது என்ற பொருள்களோடு கூர்ந்தது என்ற பொருளும் உண்டு. அஃகம் என்ற சொல் முள் என்ற பொருளைக் குறிக்கும். (மேலே உள்ள ak என்னும் PIE வேர்ச்சொல்லைத் திரும்பவும் படியுங்கள்.) அஃக மணி அக்க மணியாகி முள்மணியைக் குறிக்கும். அக்கம் மேலும் அக்ஷம் என வடமொழியில் திரியும். உருத்திராக்ஷம் என்ற கூட்டுச்சொல் இப்படித்தான் வடமொழியில் பயிலும். அஃகம் என்ற சொல் குறுமையும், கூர்மையும் கருதியே கூலம் (தானியம்) என்பதைக் குறிக்கும். அஃக விலை என்பது கூல விலையைக் குறிக்கும். அஃகம் என்பது dearness என்பதைக் குறித்து அஃகவிலைப் படி>அகவிலைப் படி = dearness allowance என்றும் பொருள் தரும். அஃகம் பற்றிய சொற்களை இன்னும் பலவாறு சொல்லலாம். விரிவு கருதி விடுக்கிறேன்.

என்னைக் கேட்டால் அஃகிய பெயர் அல்லது அஃகுப் பெயர் என்பது acronym என்பதற்கு மிகச் சரியாக வரும். இந்தையிரோப்பியச் சொற்பிறப்போடும் ஒன்றி வந்து நம் வேரை இணையாகக் காட்டும்.

recursive acronym = மீள்சுருள் அஃகுப்பெயர்

Start a discussion about அஃகுப்பெயர்

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அஃகுப்பெயர்&oldid=44710" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அஃகுப்பெயர்" page.