பேச்சு:அகசியம்
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic புறமொழிச்சொல் அல்ல
புறமொழிச்சொல் அல்ல
தொகுஅகசு=பொழுது, பகல், இராப்பகல் கொண்டநாள். அகசு+இயம்=அகசியம். இதன்பொருள், ஆசியம், வேடிக்கை, பகிடிக்கூத்து, ஏளனம் என்பவையாகும். அதாவது, அனைவரையும் பார்க்கும் படி செய்வது அகசியம் எனப்படும். இரு எனும் சொல் உரிச்சொல்லாக வரும்பொழுது இருண்ட, கரிய முதலிய பொருள்களைக் குறிக்கும். உதாரணம், இரா(இரு+ஆ), இருள்(இரு+உள்), இருட்டு(இருள்+டு), இருண்டு(இருள்+டு) மற்றும் இரவு(இரு+அவு) ஆகிய சொற்கள். இரு+அகசியம்=இரகசியம். இதன்பொருள், ஆரும் பார்க்காதபடி அல்லது ஆரும் பார்க்காதபொழுது, ஆர் கண்ணுக்கும் அல்லது ஆருக்கும் தெரியாத இருட்டான அல்லது மறைவான இடத்தில் இருக்கும் நேரத்தில் இயம்பப்படுவது(சொல்லப்படுவது) செய்யப்படுவது.--ச.பிரபாகரன் (பேச்சு) 13:55, 18 மார்ச் 2014 (UTC)
- இப்பொழுதுதான் கவனித்தேன். நன்றி. வடசொல் என்ற பகுப்பினை நீக்கிவிட்டேன்.--த♥உழவன் (உரை) 14:09, 2 சனவரி 2022 (UTC)