பேச்சு:அருமை

அருமை என்பதை அற்புதம் என்பது சற்று மிகை! அருமை என்பது சிறிய அளவாக அல்லது சிறிய எண்ணிக்கையில் காணப்படும் ஒன்று. எதிர்மறைச் சொல் மலிவு (= அதிகமாக இருப்பது). அற்புதம் என்பது வியப்பூட்டுமாறு எதிர்பாராமல் நிகழ்வது. அல் + புதம் என்று கூறலாம். எங்கும் இல்லாமல் இருந்து(ஒரு சிறிதும் எதிர்பாராமல்),திடீர் என்றோ எங்கிருந்தோ தோன்றியது என்னும் பொருள் தருவது.--செல்வா 00:42, 27 ஜனவரி 2009 (UTC)

இக்கட்டுரையில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன். அபூர்வம் என்று அங்குதரப் பட்டுள்ளாதால், 'வியப்பூட்டுமாறு எதிர்பாராமல் நிகழ்வது' = அற்புதம் என்பதாகப் புரிந்து கொண்டேன்.
  • தமிழின் சொல்லாழத்தை, முழுதும் உணர்த்தும் வழிகாட்டால்கள் இல்லாமல் தவிக்கிறேன்.
  • தற்போது 'அருநாடன்' எனக்குச் சொல்லியதைப் போன்று, முதலில் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். விக்சனரியின் முகப்பு பக்கத்தில் தமிழ் இல்லாதது எனக்கு என்னவோ போலாகிறது.
    • விக்சனரியின் முகப்பில் தமிழ் வந்துவிட்டது நண்பரே! -- Sundar 15:56, 27 ஜனவரி 2009 (UTC)
  • "mass uploder" ஏதாவது இருக்கிறதா? ஏனெனில், பாவாணரின் உழைப்பைப் பதிவேற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளேன். தற்போது கட்டணப் பயன்பாட்டு இணையவசதி கடைகளிலிருந்தே செயல் படுகிறேன். அவர்கள் WINDOWS XP பயன்படுத்துகின்றனர். ஒரு சொல்லுக்கு, ஒரு note pad என்ற வகையில் எழுதி பின் பதிவேற்றம் செய்கிறேன். விக்கி ஊடக நடுவத்தில் பயன் படுவதுபோல், நமக்கு "mass uploder" இருக்கிறதா?
    • தகவலுழவன், உங்கள் ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும் எனது உளமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும். உங்களிடம் MS Excel போன்ற ஒரு செயலி இருந்தால் முதல் கட்டத்தில் சொல், அடுத்தது பொருள் என்பது போல, ஒரு நிலையான முறையால் தட்டச்சு செய்து தாருங்கள். அல்லது வரிக்கு ஒரு சொல்லும் அதற்குறிய பொருள் ',' கொண்டு பிரிக்கப்பட்டும் ஒரு உரைக்கோப்பில் பதிவு செய்தாலும் போதும். மொத்தமாக இங்கு செய்ததுபோல் தானியங்கி முறையில் பதிவேற்றிவிடலாம். உங்கள் பெயரிலேயே பதிவேற்றித் தருகிறேன். -- Sundar 15:56, 27 ஜனவரி 2009 (UTC)
  • தமிழின் சொற்சுவை, என்னை வாழ்நாள் பணியாளனாக இருக்க வேண்டும் என்ற வித்தை என்னுள் விதைத்து விட்டது. அது தற்போதே அரும்பி வருவாதால், எனக்கு உங்களைப் போன்றவர் வழிகாட்டல்கள் மிக அவசியம். நன்றி. தகவலுழவன் 05:14, 27 ஜனவரி 2009 (UTC)
அபூர்வம் என்பது சரியாக இருக்கும், ஆனால் அற்புதம் என்பதூ சரியில்லை (அவ்வளவாக). உங்கள் தமிழ் ஆர்வம் மகிழ்ச்சியைத் தருவது. எண்ணிக்கையை உயர்த்துவது முக்கியம், ஆனால், சொற்பொருள் சரியானதாக இருக்க வேண்டுவது மிக முக்கியம். பொருளைத் தமிழில் தருவதும் முக்கியம். ஒரு சொல்லுக்கு பிறிதொரு சொல்லைப் பொருளாகத் தருவதினும், தமிழில் விளக்கமாக பொருள் தருதல் (துல்லியமாக) இன்னும் தேவையான ஒன்று. இவ் விளக்கம் எளிமையாக இருக்குமாறு எழுதுவது கடினம்!Mass uploader பற்றி ஆலமாரத்தில் கேளுங்கள், அறிந்தவர்கள் உதவக்கூடும். சுந்தர் போன்ற பயனர்களை நேரடியாகவும் கேட்கலாம். நேரம் கிடைப்பது அரிதாக உள்ளதால், போதிய அளவு என்னால் பங்களிக்க இயலவில்லை. உங்களைப் போன்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பது என் அவா.நீங்கள் தற்பொழுது கட்டணம் செலுத்தி இணையவசதி பெற்று பங்களிக்கின்றீர்கள் என்பது அறிந்து நெகிழ்கிறேன். Mass uploader பற்றி நானும் சுந்தர், ரவியிடம் கேட்டூப் பார்க்கிறேன். --செல்வா 15:28, 27 ஜனவரி 2009 (UTC)

Start a discussion about அருமை

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அருமை&oldid=1067522" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அருமை" page.