பேச்சு:அறைகலன்
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Rselvaraj in topic அறைக்கலனே சரி
அறைகலனே சரி
தொகுஅறைக்கலன் என்பதே சரி, இது இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்று ஒரு வாதமுள்ளது.(https://perumalmurugan.in/araikalanum-araikkalanum/) அறைகலன் = அறையினது கலன்; அறைக்கலன் = அறைக்கான கலன். அடிப்படையில் furniture என்பது எண்ண இயலாதது. furnitures என்பது பிழை. எனவே அறைக்கலன் என்றால் எண்ணக்கூடியதாகிவிடும் அது பிழை. எனவே அறையினது கலன் அறைகலன் என்பதே சரி. Neechalkaran (பேச்சு) 10:19, 16 நவம்பர் 2022 (UTC)
அறைக்கலனே சரி
தொகு- நீச்சல்காரன், அறையினது கலன் என்னும் ஆறாம் வேற்றுமையின் தொகையாயினும் அறைக்கலன் என்று ஒற்று மிகுந்தே வரவேண்டும். அறை என்பது அஃறிணை. அஃறிணைப் பெயர்களில் ஆறாம் வேற்றுமைக்கு வலிமிகும்.
- பிற காட்டுகள்:
- புலித்தோல், குதிரைக்கொம்பு (அஃறிணை)
- தலைவர்பேச்சு, கவிஞர்கூற்று (உயர்திணை)