பேச்சு:இயந்திரம்

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இயந்திரம் என்னும் சொல் यंत्र (யந்த்ர) என்னும் சமசுக்கிருதச்சொல்லில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பது பொதுக ஏற்ற்றுக்கொள்ளப்படும் கருத்து. இச்சொல்லின் இந்திய-ஐரோப்பிய இனச்சொற்களும் சொற்பிறப்பியலும் தெரிந்தால் இடுங்கள். பயனுடையதாக இருக்கும். இயந்திரம் என்பது இயக்குவது என்னும் பொருளில் தமிழ்வழியும் பொருள்தரும் என்பது என் தனிக்கருத்து (மொழியியல் முறைப்படி நிறுவியதல்ல). உந்துபொறி என்னும் பொருளில் உந்தகம் என்றும் சொல்லலாம். இஞ்சின்/எஞ்சின் என்பனவும் தமிழில்-வழங்கும் புறமொழிச் சொற்களாக ஏற்கலாம். ஆனால் இயந்திரம் என்பது தமிழ்-வழி நல்ல பொருள் தருவது. --செல்வா 22:50, 10 மே 2010 (UTC)Reply

வேகமாக செய்வது என்னும் வரையறை உள்ளதா?!! அப்படி ஏதும் வரையறை இருந்தால் தெரிவியுங்கள். ஏதோ ஒரு சில வழிகளில் ஆற்றலைப் பெற்று திறம்பட இயங்கும் பொறி என்பது பொதுவான கருத்து அல்லவா? ஒருவகையான ஆற்றலை தேவையான மற்றொரு வகையான ஆற்றல் வடிவிலும் இயக்க வடிவிலும் பெற்றுத்தரும் கருவி அல்லது வினைப்பொறி. இந்த மற்றொருவகையான ஆற்றல் வடிவம் என்பது பெரும்பாலும் நகர்ச்சி/புற அசைவு/இயக்க வடிவில் இருக்கும். mechanical (இயக்க, நகர்வியக்க = இயந்திரவியலான) வடிவில் இருக்கும். --செல்வா 22:56, 10 மே 2010 (UTC).--செல்வா 23:05, 10 மே 2010 (UTC)Reply
மசீ^ன் (machine) என்பது நமக்குத் தேவையான, குறிப்பிட்ட வடிவில் செய்திறனைப் பெருக்கும் ஓர் அமைப்பு/பொறி/கருவி. நெம்புகோல் கூட ஒரு கருவி (மசீ^ன், எளிய மசீ^ன்) --செல்வா 23:00, 10 மே 2010 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:இயந்திரம்&oldid=641810" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இயந்திரம்" page.