பேச்சு:உச்சரிப்பு

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

உச்சரிப்பு என்ற சொல்லுக்கு மாற்றாக முதலில் இங்கு பலுக்கல் என்ற சொல்லை கையாண்டனர். நான் நீங்கள் பரிந்துரைத்த, மொழியோசை என்பதை, பலுக்கல் என்பதற்கு மாற்றாகப் பயன்படுத்தினேன். பலுக்கல் என்ற சொல், பலரும் எளிமையற்றதாக கருதியதால், உரையாடி ஒலிப்பு என மாற்றினோம். இவ்வுரையாடலில், நற்கீரன், நான், செல்வா, பழகந்தசாமி மேலும் ஓரிருவர் பங்கு கொண்டோம். அப்பேச்சுபக்கம் உடன் எடுத்துத் தர இயலவில்லை. அவ்வுரையாடல் முடிவால், இப்பொழுது ஒலிப்பு என நம் விக்சனரியில் பின்பற்றுகிறோம். -- உழவன் +உரை.. 02:33, 11 அக்டோபர் 2013 (UTC)Reply

சரி--பரிதிமதி (பேச்சு) 02:58, 11 அக்டோபர் 2013 (UTC)Reply
பலுக்கல் என்பது பல் என்பதுடன் மட்டும் தொடர்பு உடையதாகத் தோன்றுகிறது. ஒலிப்பு புழக்கத்திற்கும் புரிந்துகொள்வதற்கும் எளிது. -~தமிழ்க்குரிசில்
ஒலிப்பு என்பதே எளிதாகவும் துல்லியமாகவும் உள்ளது. உச்சரிப்பு என்பது சற்றே வேறான பொருள் கொண்டது (அதாவது உயர்த்தொலிக்க வேண்டியவற்றைத் தக்கவாறு உச்ச துடிப்பலையில் ஒலித்துக்காட்டுவது என்று பொருள்) ஆனால் பொதுவழக்கில் இப்படியான வேறுபாடான பொருளில் உணரப்படுவதில்லை. உச்சம், உச்சி என்பன தமிழ்ச்சொற்கள்தாம். பலுக்குவது என்பது ஒலித்தொகுதிகளைத் தனித்தனியாக (பல்லு பல்லாக, பூண்டு போல்) தெளிவாக விளங்கும்படி ஒலித்துக் காட்டுவது. பலுக்கு என்றால் தெளிவாக ஒலித்துக் காட்டு என்று பொருள்.--செல்வா (பேச்சு) 05:01, 12 அக்டோபர் 2013 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:உச்சரிப்பு&oldid=1200506" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உச்சரிப்பு" page.