பேச்சு:ஒளிதம்
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
நிகழ்படமா நிழற்படமா? -மாஹிர்
- videoவுக்கு நிகழ்படம் என்று விக்கிபீடியாவில் சொல்கிறோம். நிகழ்படம் - நிழற்படம் தொடர்புடையதாக இருக்கிறதல்லவா? ஒளிதம் (video), ஒலிதம் (audio) ஆகிய சொற்களும் சுருக்கமாக நன்றாக உள்ளன--ரவி 10:08, 6 பெப்ரவரி 2007 (UTC)
- நிழற்படம் என்பது புகைப்படம் என்பதற்கு இணையாக வழங்கும் சொல். அதில் அசைவு இல்லை. ஒளிதம் என்பதும் பொருத்தமாகத் தெரியவில்லை. ஆனால் வழக்கில் பொருள் ஏற்புற்று நிற்க வாய்ப்புண்டு என்று நினைக்கிறேன். ஒலிதம், ஒளிதம் என்னும் சொல்லாட்சிகள் audio, video (light-related, see-thingy) என்னும் சொற்களுக்கு ஒருவாறு இணக்கமான இணையாக விளங்குகின்றன. --செல்வா 15:21, 19 நவம்பர் 2008 (UTC)