பேச்சு:சில்லரை
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
சில்லறை என்பதிற்கு பதிலாக சில்லரை என்று தவறாக வழங்குவர் சிலர். சோ.பா. அவர்களே, இப்பக்கத்தை நீக்கிவிடும்படித் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
- முதலில் நீக்கினேன். பின்பு இது சென்னைப் பல்கலைக்கழக அகராதியிலும் இருக்கக் கண்டேன். எனவே மீள்வித்திருக்கிறேன். பிழையான வடிவமெனினும் பெரும் பயன்பாடு உண்டெனத் தெரிகிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. பிறர் கருத்தை அறிந்து பின் செயல்படுகிறேன். 1930 களிலேயே அகராதியில் போல் உட்காரும் அளவுக்கு இப்பிழையான பயன்பாடு இருந்துள்ளதாகத் தெரிகிறது. என்ன செய்யலாம்?--சோடாபாட்டில்உரையாடுக 20:56, 1 திசம்பர் 2011 (UTC)
- நீங்கள் செய்ததே சரியெனத் தோன்றுகிறது. ஆங்கில அகராதிகளிலும் பல இடங்களில் பார்த்துள்ளேன். ஒரு பிழையான எழுத்தமைப்பு வழக்கில் இருந்தால் அதை தவிர்க்காமல் அதையும் சேர்த்து, 'தவறான எழுத்துக்கூட்டல்' என்று தெளிவாக எழுதிவிடுவார்கள். இன்று நாம் நீக்கி, பிறகு நாளை வேறு எவரேனும் சேர்ப்பதை விட தவறென்று தெளிவாக எழுதுவதே மேல்! :P
- மேலும் இதன் தோற்றம் (etymology) எங்காவது கிடைக்கிறதா என்று பார்த்து அதையும் இரு பக்கங்களிலும் சேர்த்துவிடுகிறேன். -அழகிய மணவாளன்