பேச்சு:பெயரன்

பேரன் என்றால் தாத்தாவை குறிக்குமா? கேட்டறியததாக உள்ளது?--ரவி 18:08, 3 ஜனவரி 2006 (UTC)

ஆம். பேரன் என்னும் சொல் grand father, grand son என்னும் இரண்டு உறவு முறைகளையும் குறிப்பதற்குப் பயன்படும். Mayooranathan 18:21, 3 ஜனவரி 2006 (UTC)

தமிழ்நாட்டில் தற்பொழுது இந்த அர்த்தம் வழக்கத்தில் இல்லை. முன்னர் இருந்ததா என்றும் தெரியவில்லை. இது இலங்கை வழக்கு எனும் பட்சத்தில் அதை கட்டுரைப் பக்கத்தில் குறிப்பிடுவது விரும்பத்தக்கது. முன்னர் தமிழ்நாட்டு வழக்காக இருந்திருக்கும் பட்சத்தில் அது எந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டு வந்தது என்று குறிப்பிட இயன்றாலும் நன்றாக இருக்கும்--ரவி 18:40, 3 ஜனவரி 2006 (UTC)

பேரன் என்ற சொல் பெயரன் (ஒரே பெயரைத் தாங்கி நிற்பவன்) என்ற சொல்லின் மருவுதலாக இருக்கும் என்று தோன்றுகிறது. முற்காலத்தில் (இப்பொழுதும் கூட), தாதாவின் பெயரைப் பேரனுக்குச் சூட்டுவது மரபாக இருந்ததால், இருவரும் பெயரர்களாக இருந்திருக்கலாம். -- Sundar 04:58, 6 ஜனவரி 2006 (UTC)
ஆம், சுந்தரின் விளக்கம் சரிதான். அப்படித்தான் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். Mayooranathan 16:11, 6 ஜனவரி 2006 (UTC)

சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் பேரன் என்பதற்கான பதிவைக் கீழே வெட்டி ஒட்டியிருக்கிறேன். இது எமது சந்தேகங்களுக்குச் சரியான விளக்கம் தருகின்றது என எண்ணுகிறேன்.

பேரன் - (p. 2899) [ pēraṉ ] n pēraṉ . < பேர்³. 1. Grandson, as bearing the grandfather's name; மகன் அல்லது மகளின் புத்திரன். 2. Grandfather; பாட்டன். உங்கள் பேரனார்தந் தேசுடை யெழுத்தே யாகில் (பெரியபு. தடுத்தாட். 6). இந்த இணைப்பில் பார்க்கவும் Mayooranathan 17:09, 6 ஜனவரி 2006 (UTC)

இலங்கைத் தமிழர் மத்தியில் பெற்றோரின் தந்தையையும் பேரன் என்று குறிப்பிடும் வழக்கு இன்றும் உண்டு. Mayooranathan 18:11, 7 ஜனவரி 2006 (UTC)

Start a discussion about பெயரன்

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:பெயரன்&oldid=1118895" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பெயரன்" page.