பேச்சு:பொள்

உட்டொளை என்னும் பொருள் பெயர்ச்சொல் வடிவத்திற்கானது. பொள், பொள்ளு என்பன இந்த இடத்தில் வினை வடிவம் அடிப்படையில் பொருள் சொல்லப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். அம்மியைப் பொளிய கல்தச்சன் கிடைக்கவில்லை என்னும் சொற்றொடராட்சி, அம்மியைப் பொள்ள கல்தச்சன் கிடைக்கவில்லை என்றும் வழங்கலாம். ஆனால் அதே நேரத்தில் பொள் என்பது பெயர்ச்சொல்லாகக் கொண்டால் அப்பொழுது, துளை, உட்டுளை, தழும்பு, பொத்தல், துணியில் ஓட்டை போன்ற பெயர்ச்சொல் பொருள்களும் கொள்ளும். இங்கே தலைப்புச்சொல் வினைச்சொல். எனவே முதற்பொருளாக கொடுத்துள்ள உட்டொளை என்பதைப் பெயர்ச்சொல் பகுதியில் இட வேண்டுகிறேன். உங்கள் இலக்கிய எடுத்துக்காட்டுகள் அருமை! பொள்ளென வியர்த்தல் சட்டென வியர்த்தல் எனப் பொருள் படும் என நினைக்கின்றேன். விரைவுக்குறிப்பு. பிற இடங்களிலும் பொள்ளென என்பது விரைவுக்குறிப்பாக வரும். அவற்றுள் திருக்குறளையும் சுட்டலாம்.
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

இங்கேயும் பொள்ளென ஆங்கே புறம் வேரார் என்பது சட்டென (பொள்ளென) வெளியே வேரார் (அதாவது சினத்தால் புழுங்கார்) என்று ஆளப்பட்டிருப்பதையும் காணலாம். --செல்வா 00:01, 9 மார்ச் 2010 (UTC)

சிறு இடர் தொகு

விளக்கம்
  1. துளை, ஓட்டை, பொத்தல், (சிறு) குழி, துணியில் கிழிசல், தழும்பு
  2. உட் டொளை (பி.நி.), (தி.நி.)
  1. உட் டொளை (பி.நி.), (தி.நி.)
  2. துளை, ஓட்டை, பொத்தல், (சிறு) குழி, துணியில் கிழிசல், தழும்பு


  1. பொள்ளாமணி என்றால் துளைக்கப்படாத மணி. துளையாமணி. (பொள்ளல் = துளைத்தல்)
  2. பொள் என்னும் வினை பொளி என்றும் ஆகும். பொளிதல் என்றாலும் பொள்ளல் அல்லது பொள்ளுதல்.
  1. பொள் என்னும் வினை பொளி என்றும் ஆகும். பொளிதல் என்றாலும் பொள்ளல் அல்லது பொள்ளுதல்.
  2. பொள்ளாமணி என்றால் துளைக்கப்படாத மணி. துளையாமணி. (பொள்ளல் = துளைத்தல்)

தொகுப்புப் பக்கத்தில் மேலுள்ள நான்கையும் பாருங்கள். வார்ப்புரு இட்டபின் வரும் எண்ணிக்கை (#) மீண்டும் ஒன்றில் இருந்து தொடங்குகின்றது. எனவே மாற்றி அமைத்துள்ளேன்.

--செல்வா 13:57, 9 மார்ச் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:பொள்&oldid=633245" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பொள்" page.