பேச்சு:போக்கு
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
தொல்காப்பியத்திற்கு பனம்பாரனார் எழுதிய சிறப்புப்பாயிரத்தில் 'போக்கு அறு பனுவல்' என்று எழுதப்பட்டுள்ளது. இத்தொடரில் போக்கு என்பதற்கு குற்றம் என்று விளக்கவுரை கூறப்பட்டுள்ளது. அதற்கு சான்றாக இந்த காணொளியைக் காணுங்கள் https://www.youtube.com/watch?v=vvGUtCLANoQ. நேரம் 6 நிமிடம் 30 வினாடியில் இதைக் குறிப்பிடுகிறார். --அண்ணாமலை குருசாமி (பேச்சு) 14:00, 22 ஆகத்து 2021 (UTC)
- அந்த யூடிப்பு படப்பதிவினைக் கண்டேன். அப்படப்பதிவு இங்கேயும் இணைக்கலாம். ஆனால், இங்கு எந்த ஒரு விளம்பரமும் இணைக்க இயலாது. அப்படி இணைக்க வேண்டுமாயின் அவர்களது ஒப்புதல் பெற வேண்டும் அல்லது அப்பதிவின் இறுதியில் creative commons உரிமம் இணைத்தால் உலகமெங்கும் இப்பதிவு தடையின்றி பயனாகும். தொல்காப்பியரோ, வள்ளவரோ காப்புரிமை குறித்து வினா எழுப்ப மாட்டார்கள்!. அதனை படித்தவர்களும், வடிவம் கொடுத்தவர்களும் புகழ்வதெல்லாம் சரி தான். அந்நூல்களின் புகழினைப் பரப்ப காப்புரிமையை நீக்கி, பொதுகள உரிமத்தில் தருவார்களா? என்றே ஏங்குகின்றேன்.--த♥உழவன் (உரை) 11:25, 24 ஆகத்து 2021 (UTC)