பேச்சு:முக்கியம்

புறமொழிச்சொல் அல்ல

தொகு

முக்கியம் என்பது புறமொழிச் சொல் அல்ல.
முகு(வினைச்சொல்)=முன்னே வா. முகுதல்=முன்னே வருதல். முகுதல்>முக்குதல் என வல்லின ஒற்று மிகுந்தும் வரும். முகு+இயம்=முக்கு+இயம்=முக்கியம். முன் நின்று இயம்பும் தன்மை கொண்டது. முதன்மையானது. முகம்(முகு+அம்) எனும் சொல்லும் முகு என்ற சொல்லிலிருந்தே தோன்றியது. இதன்பொருள், முன்னே வரும் தன்மை கொண்டது. ஆ(ஆதல்)>ஆகு(ஆதல்>ஆகுதல்)>ஆகுதி>ஆதி என நிற்றலைப் போல, முகு>முகுதி>முதி என வரும். முதி என்றால் மூத்தது அல்லது முதன்மையானது எனப் பொருள்படும். முது, முத்து, முந்து, முதுமை, முந்துதல், முதியவர்(முதி+அவர்), மூத்தது, முதல்(முது+அல்), முதன்மை(முதல்+மை), முதிர், முதிர்ச்சி முதலிய சொற்களும் இதிலிருந்தே தோன்றியது. --ச.பிரபாகரன் (பேச்சு) 06:27, 13 மார்ச் 2014 (UTC)

  • பகுப்பினை நீக்காமல், விரிவான விளக்கம் தந்து, எனது அறியாமையை நீக்கியமைக்கு நன்றி. உங்களால் என்மனம் சொல்லாய்தலில் ஆர்வம் கொள்கிறது. உங்களுக்குத் தெரிந்த எளிமையான நூல்களை அறிமுகம் செய்ய வேண்டுகிறேன்.இங்கு பகுப்பினை மாற்றிவிட்டேன்--தகவலுழவன் (பேச்சு) 07:38, 13 மார்ச் 2014 (UTC)
வணக்கம் தகவலுழவன் அவர்களே. எனக்குத் தெரிந்த சில நூல்களைக் கீழே குறிப்பிடுகிறேன்.
நன்றி...--ச.பிரபாகரன் (பேச்சு) 10:32, 13 மார்ச் 2014 (UTC)
மலைக்க வைக்கிறது. மிக்க நன்றி. பாவாணரின் படைப்புகளை நூலகத்தில் அமைத்தேன். கற்காதது என் பிழையே. கற்கத் தூண்டியமைக்கு நன்றி. வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 11:06, 13 மார்ச் 2014 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:முக்கியம்&oldid=1226254" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முக்கியம்" page.