பேச்சு:வல்லுநர்
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Neechalkaran
சில வேளைகளில் வல்லுனர் என்ற பயன்பாடு புழக்கத்தில் உள்ளது. ஆனால் அது தவறு. வல்லு என்பது பெயர்ச்சொல்லல்ல. வல்லுதல் என்று வினையினைக் குறிக்கிறது. ஓட்டுநர், நடத்துநர் போல வினைக்கு விகுதியாக வரும் "நர்" தான் வரும் என்பது என் கருத்து. வல்லாராயினும் வல்லுநராயினும்(புறநா. 27). என்று சான்றுகளும் உள்ளன. மேலும் காண்க https://tamilpulavar.org/வல்லுனர் https://tamilpulavar.org/வல்லுநர் இது தொடர்பான உரையாடல் https://www.facebook.com/groups/179849046077378/permalink/212131419515807/ -Neechalkaran (பேச்சு) 17:02, 15 மே 2020 (UTC)