பேச்சு:விக்சனரி பின்னிணைப்பு:சிந்தனை சொற்கள்

அறிமுகம்

தொகு

"நான் சிந்திக்கின்றேன், அதனால் நான்." என்பது டெஸ்கராற்ஸ் (René Descartes) இன் பிரபல வாக்கியம். "சிந்திப்பது நானா?" என்பது சாற்றுவின் (Jean-Paul Sartre) கேள்வி. இப்படி சிந்தனைக்கும் எமது இருப்புக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.


சிந்தனையை பல வழிகளில் வெளிப்படுத்தலாம். எமது செயல்கள், கலைகள், மொழி என பல வழிகளில் எமது சிந்தனை வெளிப்படுகின்றது. அவ் வழிகளில் மொழிக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. "மொழியின் எல்லைகளே, சிந்தனையின் எல்லைகள்." "The limits of my language mean the limits of my world." என்று லுட்விக் விற்ஜென்சிரீன் (Ludwig Wittgenstein) குறிப்பிட்டார்.


இன்று தமிழர் பலர் பெரும்பாலும் ஆங்கிலத்தில் கல்வி கற்பதால், ஆங்கிலத்தில் சிந்திக்கின்றார்கள். ஆங்கில சொற்கள் அல்லது எண்ணகருக்கள் அவர்களுக்கு பரிச்சியமாக இருக்கின்றது. சிந்தனை நோக்கிய அவ் சொற்கள் அல்லது எண்ணகருக்களின் தமிழின் இணை அல்லது தொடர்புடைய சொற்கள் அல்லது எண்ணகருக்களுடன் தொடர்பு படுத்தவே இவ் விக்சனரி பின்னிணைப்பு.

செயல்பாடுகள்

தொகு
  • பட்டியலில் இருக்கும் சொற்களுக்கு தமிழ் சொற்கள் தரலாம்.
  • பட்டியலின் வடிவமைப்பை செதுக்கலாம்.
  • மேலும் சொற்களை சேர்த்து, இணை சொற்களை தரலாம்.
  • மேலும் உங்களின் சிந்தனைக்கு ஏற்றவாறு மேன்படுத்தலாம்.

துணை வெளி இணைப்புகள்

தொகு

உரையாடல்

தொகு
Return to "விக்சனரி பின்னிணைப்பு:சிந்தனை சொற்கள்" page.