பேச்சு:చెట్టు
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
அருள்கூர்ந்து ஆங்கிலச் சொற்களை இங்கே இடாதீர்கள்!! மரம் என்னும் சொல்லைப் பார்த்தால் அங்கு பிற பல மொழிகளிலும் பொருள் இருக்கும். --செல்வா 05:20, 7 மே 2010 (UTC)
- நாம் இந்தி பெயர்ச்சொற்களுக்கு, ஆங்கிலச்சொல்லைப் பயன்படுத்தினோம். அதுபோலவே இங்குமிருந்தால் நலமென எண்ணுகிறன்.த*உழவன் 05:33, 7 மே 2010 (UTC)
- அல்ல, த*உழவன். சொற்பொருள் தமிழில் இருத்தல்தான் கருத்து (அதனால்தான் இது தமிழ் விக்சனரி). இந்திச் சொற்களுக்கும் பொருள் தமிழில் மட்டுமே வழங்க வேண்டும். பிற மொழி விக்சரிகளையும் அருள்கூர்ந்து பாருங்கள். எ.கா இங்கே பாருங்கள், இலித்துவேனிய மொழியில் இங்கே பாருங்கள், துருக்கி மொழியில் இங்கே பாருங்கள்.--செல்வா 05:44, 7 மே 2010 (UTC)
- இது பற்றி உங்களின் கருத்தினை ஏற்கிறேன். இருப்பினும், பழ.கந்தசாமி கருத்துப்படி ஆங்கிலச் சொல்லிருந்தால், இன்னும் தெளிவாக இருக்கும். உறுதித்தன்மை மேலோங்கும்.(இது பற்றி முன்பு அரட்டையரங்கத்தில் கலந்தாலோசித்தோம்.) பல தமிழ்ச்சொற்கள், பல்பொருள் ஒரு மொழி என்பதால், ஆங்கிலச்சொல் அவசியமென்றே கருதுகிறோம்.த*உழவன் 05:54, 7 மே 2010 (UTC)
- இல்லை, த*உழவன். இது சரியான முறை அல்ல என்பது என் நேர்மையான கருத்து. தமிழ்வழி பொருள் சுட்டுவதே நம் நோக்கம். ஏதேனும் சிக்கலான சொல்லாக இருந்தால் மிக மிக சில இடங்களில் பிறைக்குறிகளுக்குள் ஆங்கிலச்சொல்லைச் சுட்டுவது பொருந்தும்). மரம், அப்பா, அம்மா விலங்கு போன்ற சொற்களுக்கு ஆங்கிலச்சொல் தருவது பொருத்தம் இல்லை. ஆங்கிலச் சொல்லோ பிறமொழிச்சொல்லோ என்னவென்று தெரிய வேண்டும் ஏனில் மிக எளிதாகத் தமிழ்ச்சொல்லைச் சொடுக்கிப் பெறலாமே? அல்லது பிறமொழி விக்கி இணைப்பு இருக்கும் இடத்தைக் கொண்டு பெறலாமே. --செல்வா 06:08, 7 மே 2010 (UTC)
- ஒவ்வொரு மொழியாளரும் தங்கள் மொழியில் தரும்பொழுது தமிழ் விக்சனரியில் மட்டும் ஏன் ஆங்கிலத்திலும் தர வேண்டும். அதற்கு ஆங்கில விக்சனரியையே பார்க்கலாமே!!--செல்வா 06:10, 7 மே 2010 (UTC)
- இல்லை, த*உழவன். இது சரியான முறை அல்ல என்பது என் நேர்மையான கருத்து. தமிழ்வழி பொருள் சுட்டுவதே நம் நோக்கம். ஏதேனும் சிக்கலான சொல்லாக இருந்தால் மிக மிக சில இடங்களில் பிறைக்குறிகளுக்குள் ஆங்கிலச்சொல்லைச் சுட்டுவது பொருந்தும்). மரம், அப்பா, அம்மா விலங்கு போன்ற சொற்களுக்கு ஆங்கிலச்சொல் தருவது பொருத்தம் இல்லை. ஆங்கிலச் சொல்லோ பிறமொழிச்சொல்லோ என்னவென்று தெரிய வேண்டும் ஏனில் மிக எளிதாகத் தமிழ்ச்சொல்லைச் சொடுக்கிப் பெறலாமே? அல்லது பிறமொழி விக்கி இணைப்பு இருக்கும் இடத்தைக் கொண்டு பெறலாமே. --செல்வா 06:08, 7 மே 2010 (UTC)
- தேவைப்படும் இடங்களில் மட்டும், ஆங்கிலச்சொல்லைப்பயன்படுத்தலாம். மிக மிக ஏற்புடைய கருத்து. நன்றி. தெளிவுற்றேன். தமிழ்வழி கல்வியை வளர்ப்பேன்.இந்திச்சொற்களினையும் மாற்றி விடுகிறேன்த*உழவன் 06:21, 7 மே 2010 (UTC)