பேச்சு:ababol

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

சோடாபாட்டில் இங்கே ஆங்கிலமொழி பெயர்ப்பைத் தருதல் வேண்டாம். இந்தச்சொல்லுக்கான ஆங்கிலச் சொல்லைத் தருவது ஆங்கில மொழி விக்சனரியின் பொறுப்பு. ஆங்கில மொழிச் சொல்லைப் பார்க்க இடப்புறம் உள்ள பட்டையில் உள்ள தொடுப்பை சொடுக்கினால் போதும் (அது போலவே பிறமொழி தொடுப்புகளைச் சொடுக்கி அவ்வவ் மொழிச்சொற்களை அறியலாம்.. அவை அவ்வவ் மொழி விக்சனரிகளின் கடமை). நம் கடமை தமிழில் தருதல்.--செல்வா 14:14, 13 மே 2011 (UTC)Reply

  • செல்வா, நீங்கள் சொல்வதன் காரணம் புரிகிறது எனினும், சில சமயங்களில் பக்கத்திலேயே ஆங்கிலப்பொருளும் இருந்தால் தமிழ் மொழிபெயர்ப்பைச் சரிபார்க்கவும், புரிந்துகொள்ளவும் உதவும் என்பதாலேயே இவ்வாறு இட்டுள்ளேன். நம்மைப் போல அனைவரும் விக்சனரியில் எது எங்கு உள்ளது என்பதை அறிந்தவர்கள் அல்ல என்பதால் ஆங்கிலம் கீழே வருதல் அவர்களுக்கு உதவும் என்பது என் கருத்து. இது ஒருவகையில் disambiguation என்பதாக நான் பார்க்கிறேன். பழ.கந்தசாமி 15:31, 13 மே 2011 (UTC)Reply
  • இல்லை பழ. கந்தசாமி!! நாம் ஆங்கில விக்சனரியின் வேலையைச் செய்கிறோம்!!! ஆங்கில விக்சனரி எதற்காக உள்ளது?!! இப்படிச் செய்தல் கூடாது நண்பர்களே!! --செல்வா 16:44, 13 மே 2011 (UTC)Reply
  • பழ. கந்தசாமி, சோடாபாட்டில், இப்படியான சொற்களில் ஆங்கிலமொழியர்ப்பை நீக்கலாமா? --செல்வா 15:12, 15 மே 2011 (UTC)Reply
எனக்கு ஒப்புதல் இல்லை. செய்யவேண்டியன எவ்வளவு உள்ளன. எ.கா - தமிழில் பொருளில்லாத தமிழ் சொற்களே நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றையெல்லாம் விடுத்து தேவையின்றி மேலதிகமாக உள்ள தகவல்களை/இணைச்சொற்களைத் தேடி நீக்குவது வீண்வேலை. அவை பக்கங்களுக்கு வலு சேர்க்கின்றனவே தவிர கெடுதி ஒன்றும் செய்யவில்லை. --Sodabottle 16:04, 15 மே 2011 (UTC)Reply
சோடாபாட்டில், அருள்கூர்ந்து நான் கூறியுள்ள காரணங்களையும் எடுத்துக்காட்டுகளையும் கருத்தில் கொண்டு மறுமொழி தாருங்கள். நான் எசுப்பானியச் சொல்லுக்கு இந்திச்சொல் இருக்க வேண்டும் என்று சேர்க்கலாமா? மொழிபெயர்ப்புகள் (பிறமொழியில் தருவது) தமிழ்ச்சொற்களுக்கு மட்டுமே (அல்லது அந்த அந்த மொழி விக்சனரிகளின் முதன்மொழிச்சொற்களுக்கு மட்டுமே!) பல மொழி விக்சனரிகளில் பின்பற்றும் வழக்கத்தையும் எடுத்துக்காட்டினேன்! ஏன் ஆங்கிலத்திலும் இந்தியிலும் என்று எசுப்பானிய மொழிச்சொல்லுக்கு தமிழ் விக்சனரியில் பொருள் (ஈடுசொல், மொழிபெயர்ப்பு) தர வேண்டும்?!!! அப்படி தேவை இல்லாத "மொழிபெயர்ப்பு"களைச் சேர்த்ததுதான் வீண்செயல் சோடாபாட்டில், அருள்கூர்ந்து இதனைப் புரிந்துகொள்ளுங்கள்! முறைமீறி உள்ளடக்கம் உருவாக்க வேண்டாம்! நீங்கள் நீக்க வேண்டாம்.. நான் நீக்கித்தருகின்றேன்.. ஏனெனில் இது முறையற்ற சேர்ப்பு! நான் நீக்கியதையும் நீங்கள் மீண்டும் சேர்த்துள்ளீர்கள்! இது பற்றி கருத்து மாறுபாடு இருந்தால், சற்று பொறுமையாக அலசுவோம். குறிக்கோள்களைப் புரிந்துகொள்வோம். ஒரு x மொழி விக்சனரி, அந்த x மொழிச் சொற்களுக்கு எல்லா மொழிகளிலும் விளக்கம், மொழிபெயர்ப்புகள் தரலாம். எல்லா மொழிச்சொற்களுக்கும் x மொழியில் விளக்கம், பொருள் தரலாம். இவை இரண்டே குறிக்கோள். எல்லா மொழிச்சொற்களுக்கும் x மொழி விக்சனரி, எல்லா மொழிகளிலும் மொழிபெயர்ப்புகள் தருதல் கூடாது. எ.கா. ஆங்கிலத்திலோ, இந்தியிலோ எசுப்பானிய மொழிச்சொல்லுக்குப் பொருளோ மொழிபெயர்ப்போ தருதல் கூடாது. இவ் வேலையை ஆங்கில விக்சனரி, இந்தி விக்சனரி செய்யும். அதனை உடனே பார்க்க இடப்புற மொழிப்பெட்டியில் இணைப்பும் வசதியாக இருக்கும். ஆகவே பிறமொழி பெயர்ப்புகள் தமிழல்லா சொற்களுக்குத் தருதல் கூடாது. இதனை அருள்கூர்ந்து புரிந்துகொள்ளுங்கள்! தேவை இல்லாமல், தவறுதலாக சேர்த்த மொழிபெயர்ப்புகளை நான் நீக்க உதவுகிறேன்... ஆனால் இனி இப்படிச் சேர்க்காமல் இருக்க வேண்டுகிறேன்!--செல்வா 21:56, 15 மே 2011 (UTC)Reply
  • செல்வா, வேற்றுமொழிச் சொற்களுக்கு அனைத்து மொழிகளிலும் பொருள் தருவது நோக்கமல்ல. பொதுமொழியாக, பரவலான பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம் இருக்கிறது என்பதால் ஆங்கிலப்பொருள் பக்கத்தில் தருவது தமிழ் மொழிபெயர்ப்புக்கு வலுவும் தெளிவும் சேர்க்கிறது என்பதே என்கருத்து. மொழிபெயர்ப்புடன் பயன்பாடு முதலியன சேர்க்கும்போது பொருள்தெளிவு பிறக்கும் அதற்குத் தேவையான புலமையும் ஆட்பலமும் கிடைக்கும்போது ஆங்கிலம் தரவேண்டியதில்லை. ஆங்கிலப் பக்கம் இடப்பக்கத்தில் வந்தாலும் அங்கு அது உள்ளது என்பது பொருள்பார்க்க வருவோர்க்குத் தெரியுமா என்பது ஐயமே! பழ.கந்தசாமி 05:05, 16 மே 2011 (UTC)Reply
  • பழ.கந்தசாமி, பின் ஏன் ஆங்கில விக்சனரி உள்ளது? இது மிகவும் தவறான போக்கு! ஆங்கிலம் "பொது"மொழி எனில் அதில் மட்டுமே பொருள் இருக்கலாமே!! இது தமிழ் விக்சனரி!! ஆங்கிலம் அறிந்தவர்கள் ஆங்கில விக்சனரியில் தமிழ்ச்சொற்களுக்குக் கூட ஆங்கில மொழிபெயர்ப்புகள் பொருள்கள் அறிந்துகொள்ளலாம். தமிழ் விக்சனரியின் குறிக்கோளை மாற்ற வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன். இது மிகவும் முக்கியமான அடிப்படை செய்தி என்பதாலேயே நான் இதனை இத்தனை முறை சொல்ல வேண்டியுள்ளது. அருள்கூர்ந்து புரிந்துகொள்ளுங்கள். ஆங்கில மொழிபெயர்ப்புகளை நான் நீக்கித்தருகின்றேன்!--செல்வா 12:23, 16 மே 2011 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ababol&oldid=948895" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ababol" page.