ஒலிப்பைச் சுட்டி இருப்பது நல்லது. ஆனால் கூட்டுச் சொற்களுக்கு இரண்டு வழியாக ஒலிப்பைச் சுட்டலாம். (1)கூட்டுச்சொல்லில் உள்ள தனித்தனி சொற்களுக்கு ஒலிப்பைச் சுட்டலாம், அல்லது (2) கூகுள் மொழிபெயர்ப்புப் பக்கத்தில் இப்பொழுது ஒலிப்பையும் தருகின்றனர். மூல மொழி, பெயர்க்கப்படும் மொழி இரண்டும் ஒன்றாகவே வைத்து, ஒலித்துக் காட்டு என்றால். மிக அழகாக ஒலித்துக் காட்டுகின்றது. இங்கே இக்கூட்டுச் சொல்லுக்குப் பாருங்கள். இக்கூட்டுச் சொல்லை உருசிய மொழிக்குப் பெயர்த்துத் தா என்றாலும், (சரியோ தவறோ) பெயர்த்துத் தருவது மட்டுமல் அல்லாமல், அதன் ஒலிப்பையும் ஒலிவடிவில்லேயே தருகின்றது (Абсолютная черта) என்பதை ஒலித்துக் காட்டுவதைப் பாருங்கள்:இங்கே.இதே சொற்கோவையை பிரான்சிய மொழியில் ligne absolue என்றும் அதன் ஒலிப்பு இப்படி என்றும் காட்டுகின்றது. இப்படியாக 57-58 மொழிகளில் தருகின்றது கூகுள். வருங்காலத்தில் ஒருவர் தொலைபேசியில் ஆங்கிலத்தில் ஒரு பக்கம் பேசினால், மறுமக்கம், அவர் பேசப்பேச நமக்கு அது தமிழில் மொழிபெயர்த்துத் தரும் (real-time translation) (இது இன்னும் நிறைவுடன் செயல்படுத்தி யாரும் காட்டவில்லை ஆனால் தொலைவில் இல்லை). --செல்வா 14:45, 12 செப்டெம்பர் 2010 (UTC)Reply

  • கூட்டுச்சொல்லைக் கண்டேன்.ஒலியைக்கேட்க முடியவில்லை. தனிச்சொற்கள் சில நேரங்களில் கேட்கிறது. குறைவான இணையவேகம் காரணமாக இருக்கலாம்.எனினும், கூட்டுச்சொற்களுக்கும் ஒலிக்கோப்புகளை இணைக்கும் வழிமுறையைப் பற்றி சிந்திக்கத் தூண்டியமைக்கு நன்றி. ஏனெனில், ஊடக நடுவத்தில் பெரும்பான்மையான கூட்டுச்சொற்களுக்கு ஒலிக்கோப்புகளை இல்லை. பதிவேற்றத்திற்கு பிறகு செவ்வன செய்யும் வகைக் கண்டறிய வேண்டும்.--த*உழவன் 02:14, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • த.இ.ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம் பகுதியில் ஒரு கருத்துத் தெரிவித்திருந்தேன். அதை ஒற்றி இவண் சேர்க்கிறேன்:

த*உழவன், மேலே குறிப்பிட்ட இடுகைகள் கண்டேன். நன்றாக உள்ளன. பாராட்டுகள்! பயன்பாடு, மொழிபெயர்ப்பு என்று இரு வரிகள் இட்டால் வரும் நாட்களில் இடுகை செய்து மெருகூட்ட இயலும் என்பது என் கருத்து.

absolute line ஒலிப்பை எசுப்பானியம், இத்தாலியம், பிரான்சியம் போன்ற பல மொழிகளில் கேட்டேன். தெளிவாக உள்ளது. இத்தாலியப் பெயர்ப்பு அவ்வளவு சரியாக இல்லை, ஒலிப்பு நன்று. --பவுல்-Paul 03:38, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply



  1. படம் இடுவதற்கான குறிகளும், IPA, தமிழ் ஒலிப்புகுறிப்புகளும்,நீங்கள் கூறிய பயன்பாடும், இத்தாலியம், பிரான்சியம், போன்ற :மொழிபெயர்ப்புகளும், சொல்வளம் பகுதிகளும், இங்கு இல்லாமல் இருப்பதால், அதனை எழுதவியலாது என்ற நோக்கத்துடன் இதை அமைக்கவில்லை.அவற்றை நன்கு உங்களைப் போன்றோர் சிறப்பாகச் செய்கிறீர்கள். உங்களைப் போன்று நானும், பிறரும் ஈடுபட வேண்டும். இப்பொழுதே இணைத்து விடுவதை விட, அதனை எழுதும் போது இணைத்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன்.ஏனெனில்,
  2. புதுப்பயனர் ஒருவர் எளிமையாகச் செயல்பட/ அவரை ஊக்குவிக்க/ .. இந்த வடிவமைப்பு உதவும் என எண்ணுகிறேன். இவ்வருடம் பொறியியல் கல்லூரிகளிலே தமிழ்வழி தேர்வு நடைபெற உள்ளதை நாம் மறக்கக் கூடாது. அவர்கள் நம் தளத்திற்கு வருவதற்கான வாய்ப்பும் உண்டு.நமது பதிவேற்றச் சொற்களில் ஏறத்தாழ45,000சொற்கள் பொறியியல் சொற்களே.
  3. பொருள், விளக்கம் என்ற வார்ப்புருக்கள் விக்கிநிரலில் இல்லை என்ற கருத்தும் இருப்பதை நாம் மறவக்கூடாது.அதனால் தான் முதல்வரியில் எப்பொழுது வேண்டுமானாலும் சமக்குறியீடுகளை (wikisyntax) கொண்டு வரும் படி, {.{முதல்வரிவார்ப்புரு2}} வார்ப்புருவினை அமைத்துள்ளேன்.
  4. .முன்பு நாம் நிகழ்த்திய உரையாடல்களை இன்னும் தொகுக்கவில்லை. அதோடு நமக்கு முன் நடந்த உரையாடல்களையும் அதோடு இணைக்க வேண்டும். பிற பயன்பாட்டாளர்களின் கருத்தினையும் இணக்க வேண்டும். அப்பொழுது தோன்றும் கருத்தில் நிச்சயம் இந்த வடிவமைப்பும் மாறும் சாத்தியக்கூறுகள் உண்டு. அதற்கேற்ற வகையில், {.{முதல்வரிவார்ப்புரு2}} போல இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒலிப்பு, பொருள், விளக்கம் மூன்றினையும் அமைக்க எண்ணுகிறேன்.அதோடு மேலும் மூன்று வெற்று வார்ப்புருக்களையும் இணக்க உள்ளேன். அதன்மூலம் பக்கத்தோற்றத்தில் இப்பொழுதுள்ள தோற்றமே இருக்கும்...
  5. இப்பொழுதுள்ள ஒரே நோக்கம். பதிவேற்றம். வடிவமைப்பை முழுமையாக எப்பொழுது வேண்டுமானாலும் எளிமையாகச் செய்ய வழிவகைகளுடனானப் பதிவேற்றம். எனவே, நீங்கள் கூறிய படிவக்கூறுகளைத் தன்னிச்சையாக விட்டுவிட்டேன் என்று நினைக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.
  6. பொருள் என்பதில் சுருக்கமாகவும், விளக்கம் என்பதில் விரிவாகவும் எழுத வேண்டும் என்ற வழிகாட்டலை புதுப்பயனருக்குக் கூற வேண்டும். ஈடுபாடு கொண்ட பயனருக்கு IPA, பயன்பாடு, சொல்வளம் போன்ற பிற உட்கூறுகளை விரிவு படுத்த தூண்ட வேண்டும் என்று எண்ணுகிறேன். அதிகத்தகவல் குழப்பத்தையும், ஈடுபாடில்லாத் தன்மையினையும் தர வாய்ப்புள்ளது என்பதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். --த*உழவன் 06:25, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply

//தகலுழவனுக்கு வணக்கம். மேலே குறிப்பிட்ட 3 ஆங்கில கூட்டுச் சொற்களையும் பார்த்தேன். மிகவும் எளிமையாகவும், தற்போதய தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் இருக்கிறது. ஆகவே இதனை மாதிரியாக வைத்துக்கொள்ளலாம் என்பது எனது கருத்து. --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 07:19, 13 செப்டெம்பர் 2010 (UTC)//இக்கருத்து,இங்கிருந்து இடப்பட்டது.--த*உழவன் 12:51, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply

சில கருத்துகள்

தொகு
  • ஆங்கிலச் சொல்லுக்கு மொழிபெயர்ப்புகள் வேண்டியதில்லை (தமிழில் பொருள் இருந்தால் போதும்).
  • சொல்லும் அதன் இலக்கணக்குறிப்பும் (பெயர்ச்சொல், வினைச்சொல்) பொருள் என்னும் பட்டைக்கு அடுத்து வந்தால் நன்றாகவும் உதவியாகவும் இருக்கும் என்பது என் கருத்து. அதாவது முதலில் சொல்லின் ஒலிப்பு. உடனே பொருள் என்னும் பட்டை, அதனுள் முதலில் அது பெயர்ச்சொல்லா வினைச்சொல்லா அல்லது பிறவா எனக் குறிப்பிடுதல் (ஒரே வரியில்), பின்னர் பொருளை வரிசைப்படி தருதல். பின்னர் விளக்கம், பயன்பாடு, சான்றுகோள் இருத்தல் (தமிழல்லா பிற சொற்களுக்கான உள்ளடக்க வரிசை). விளக்கத்துக்குள் தனி வரி அறிவிப்போடு, சொற்பிறப்பியல் தரலாம். எப்பொழுதில் இருந்து அச்சொல் அம்மொழியில் வழக்கில் இருந்தது என்று தரலாம். இப்படியாக. தொடர்பான சொற்கள் என்றும் ஒரு பட்டை இருக்கலாம் (derived terms) என்பதற்கு ஈடாக. சில இடங்களில் ஒத்த பொருளுடைய சொற்கள் எதிர்ப்பொருள் கொண்ட சொற்கள் என்பதனையும் சேர்க்கலாம் (தனிச்சொற்களுக்கு இவை பெரும்பாலும் பொருந்தும்). கூகுளில் கூட்டுச்சொற்களுக்கான ஒலிப்பும், எழுத்துவடிவில் தரவும் உள்ளன (இவை சரியானவையாக இல்லாமல் இருக்கலாம்; பிற இடங்களோடு ஒப்பிட்டு சரிபார்த்து இட வேண்டியிருக்கலாம்). "விளக்கம்" முதலான உட்தலைப்புகள் என்ன, அவற்றில் என்ன இடலாம் என்பது போன்றவை பின்னர் உதவிப்பக்கங்களில் எழுதி வைக்கலாம். இப்போது அது பற்றி சிந்திக்க வேண்டாம். IPA போன்ற வடிவமைப்புக் கூறுகளை இட்டு வைப்பதே நல்லது (பின்னர் நிரப்பிக்கொள்ளலாம்).--செல்வா 12:41, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • வார்ப்புரு:ஒலிப்புக்குரியவார்ப்புரு, வார்ப்புரு:பலஆங்அகரமுதலி, வார்ப்புரு:பொருளுக்குரியவார்ப்புரு வார்ப்புரு:முதல்வரிவார்ப்புரு2, வார்ப்புரு:விளக்கத்திற்குரியவார்ப்புரு, வார்ப்புரு:வெற்றுவார்ப்புரு என்பன வேண்டாம் என்பது என் கருத்து. எதற்குள் எது உள்ளது, எவ்வாறு இயங்குகின்றது, என்பதெல்லாம் குழப்பம் தருவதாக உள்ளது. இப்படி ஒன்றுக்குள் ஒன்று சொருகிய வார்ப்புருக்கள் (nested templates) தேவையற்றவை, குழப்பம் கூட்டுவன. முன்னர் மிக எளிமையாக இருந்த முறையே நல்லது என்பது கருத்து. தகவலுழவன், அருள்கூர்ந்து இப்படியெல்லாம் மாற்றிக்கொண்டே போகாதீர்கள்!! கருத்து ஒருமிக்க இருக்கும் தருவாயில், முற்றிலும் புதிய குழப்பங்களை ஏன் உருவாக்க வேண்டும்?!! --செல்வா 12:53, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply

குழப்பவில்லை. நான்செய்த மாற்றங்களால் பக்கவடிவமும் மாறவில்லை. பின்னர் (ஒருவேளை) விக்கிநிரலுக்கு மாற வழி செய்துள்ளேன்.பதிவேற்றம் வரைக் காத்திருங்கள். பின்பு பலரின் கருத்தறிந்து, பலரின் கருத்தறிந்து வேண்டிய மாற்றங்களை செய்யமுடியும் என்று நீங்கள் கூறியதை நான் மறக்கவில்லை. அருள்கூர்ந்து இப்பொழுது செய்த மாற்றங்களால், பேரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. வசதிக்காக சிறுநிரல் மாற்றங்கள் மட்டுமே செய்துள்ளோம்.அவ்வளவே. --த*உழவன் 13:27, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply

குழப்பமா, தெளிவா?

தொகு

இங்கே நடந்துவரும் உரையாடலைப் பார்க்கும்போது குழப்பம், தெளிவு என்னும் இரு சொற்கள் அடிக்கடி வருகின்றன. விக்சனரி இடுகைகள் எளிமையாகவும் பயனர்மகிழ்வு தருவனவாகவும் இருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில், சில தகவல்கள் கூடுதலாகக் கொடுப்பது விக்சனரியின் தரத்தை உயர்த்தும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பயன்பாடு என்பது இவற்றுள் ஒன்று. சென்னை அரமுதலியைப் பாருங்கள், ஆக்சுபோர்டு அகரமுதலியைப் பாருங்கள், அங்கே பயன்பாடு இடுகை பயனுள்ளதாக இருக்கிறது. அடுத்த அளவீடு விக்சனரியின் வருங்கால வளர்ச்சி. நாம் இப்போது அடித்தளம் இடுகிறோம். நாமோ பிறரோ அழகிய கட்டடத்தை எழுப்புவார்கள். அடித்தளம் உறுதியாக, நிலைப்பதாக இட வேண்டாமா? என்வேதான் மொழிபெயர்ப்பு என்னும் தலைப்பும் இட பரிந்துரைத்தேன்.

இறுதியாக, பலரின் கருத்துப் பகிர்வு அடிப்படையில் சிறப்பான முடிவுகள் எடுப்போம் என்பது நம் நம்பிக்கை. இப்பொழுதுள்ள ஒரே நோக்கம். பதிவேற்றம் என்கிறார் த*உழவன். இதை நான் மறுக்கவில்லை. ஆனால் பதிவேற்றத்தை முழுமையாக, அழகாக செய்ய வேண்டாமா? அதற்காக ஒருசில நாள்கள் ஆகிவிட்டால் இழப்பொன்றும் இல்லையே! --பவுல்-Paul 14:39, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply

பக்கவடிவ உரையாடல் இங்கே நடப்பது ஏன்?

தொகு

த*உழவனே! பக்கவடிவம் பற்றிய உரையாடல் dado (உங்கள் பக்கவடிவம்), dado2 (செல்வா முன்மொழிந்தது) பக்கங்களில்தானே நடந்துகொண்டிருந்தது? இப்போது ஏன் புதிதாக இப்பக்கத்தில் வந்தது? இது உங்களுடைய இன்னொரு பக்கவடிவமா? அதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? உங்கள் பக்கவடிவத்தில் ஏதாவது மாற்றவேண்டும் என்றால், dadoவிலே மாற்றுங்களேன். அப்போதுதானே நாம் பக்கவடிவத்தை விரைவில் இறுதிசெய்ய முடியும்?

dado, dado2 பக்கவடிவங்களிடையே (அழகியல் கூறுகளைத் தவிர்த்துப் பார்த்தால்), அடிப்படையில், dadoவில் பயன்பாடு இல்லை என்பதுதான் பெரிய வேறுபாடு. பயன்பாடு என்பது மிகவும் தேவையான ஒன்று. புதிதாகப் பொருள் இடும் பயனர்களை அதைப் பற்றிச் சிந்திக்கவைத்து, இயன்றால் அதைச் சேர்க்க அது பக்கவடிவத்தில் இருத்தல் வேண்டும். என்னைப் போன்று பெரும்பாலும் பயன்பாடு எழுதுவோர்க்கும் அது பக்கவடிவத்தில் இருந்தால், அவ்வார்ப்புரு அல்லது உபதலைப்பைப் புதிதாகச் சேர்க்கவேண்டிய வேலையும் மிச்சம். புதிதாகப் பக்கவடிவம் இயற்றும் நேரத்தில் ஏன் பின்னால் சேர்த்துக்கொள்ளலாம் என்று பயன்பாடு என்ற பகுதியைச் சேர்ப்பதைத் தள்ளிப்போடவேண்டும்? (பழைய பக்கவடிவங்களில் பயன்பாடு பகுதி இல்லைதான். ஆனால், அவற்றில் அது ஒரு குறைபாடு என்றே நான் சொல்லுவேன். படங்கள், இலக்கணக் குறிப்புகள் போன்றவையும் அவைகளில் இல்லை. ஏனென்றால், அவை ஆரம்பகால முயற்சி).

நன்றி. பழ.கந்தசாமி 15:10, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply

  • பயன்பாடு என்பது இருக்கக்கூடாது என்று கருதவில்லை. விக்சனரியில் வெறும் வெற்றுப்பக்கம் அதிகமாக இருப்பதைத் தவிர்க்கவே அங்ஙனம் செய்ய நினைத்தேன். எளிமையாக இருந்தால், நன்றாக இருக்கும் எனக் கருதுகிறேன். எதில் எதை இடுவது என்ற சந்தேகம் புதியவர்களுக்கு வர வாய்ப்புள்ளது.{.{விளக்கம்}}+{.{பயன்பாடு}} வார்ப்புரு பற்றிய ஐயத்தை பழ.கந்தசாமியும்,பவுலும், நற்கீரனும் கேட்டிருந்தனர். எதில் எதை இடுவது என்ற குழப்பம் புதுப்பயனருக்கு வர வாய்ப்புண்டு. நாம் ஒவ்வொரு பக்கத்தினையும் வளர்பதில் தான், நமது விக்சனரியின் எதிர்காலம் இருக்கிறது. எனவே, பல உட்கூறுகளை தவிர்த்தேன். அண்மையில் அருநாடன், பெரியண்ணன் இட்ட பதிவுகளைப்பாருங்கள். பரிதிமதி கூட அதிக பக்கங்கள் பொருள் என்பதோடு சரி.அவர்களிடம் விளக்கம்,பயன்பாடு முக்கியத்துவம் பற்றி எடுத்துகூற வேண்டும். எப்படியும் ஒரு பக்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபடும் ஒருவருக்கு அவ்வாரப்புருக்கள் இடுவது எளிது என்றே எண்ணினேன்.
  • இப்போதுள்ள தேவை பொருள்வார்ப்புரு மட்டுமே.அதற்காக ஒலிப்பு வார்ப்புருவை இட வேண்டியுள்ளது. விளக்கம் வார்ப்புருவைக்கூட எடுத்துவிடலாம் என்பதே என் எண்ணம்.
  • பக்க வடிவத்தைப்பற்றி இங்கு உரையாடவில்லை. இப்போதுள்ள அடிப்படைத் தேவைக்கு இது போதுமா? என்று அறியவே இப்பேச்சுப்பக்கம் இட்டேன். அது கடந்த ஒரு மாதமாக நடந்த பேச்சுபக்கம் போல நீண்டு விட்டது.
  • தமிழ்இணையமாநாட்டிற்கு பிறகு உரையாடல் அதிகமாகிவிட்டது என்பதில் எனக்கு சற்றுவருத்தமே. பதிலுரைக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.இன்னும் எத்தனை நாளைக்கு உரையாடல் ... எந்த பக்கம் முடிவு எடுத்தாலும் தகவல் எந்திரன் பதிவு செய்வான் என்று ஏற்கனவே திட்டபக்கத்தில் அறிவித்து உள்ளேன். நான் உரையாடலை நிறுத்தினால், எனக்குக் கருத்து தெரிவிப்பருக்கு செய்யும் மரியாதையின்மை போல் ஆகிவிடும். நாம் பதிவேற்ற உள்ள வார்ப்புருக்களில் கூட மாற்று கருத்து எழ வாயப்புண்டு. ஏற்கனவே,நற்கீரன் அது பற்றி உரைத்துள்ளார். அதற்கான வார்ப்புரு மாற்றத்தில் பெயர் குழப்பம் இருப்பதால் அதனை மாற்றிக் காத்திருக்கிறேன். குறைந்த தேவையான உட்கூறுகளை அடங்கிய பதிவேற்ற படிவம் அமைத்துத்தாருங்கள். அது, புதுப்பயனருக்கும் எளிமையாக இருந்தால் மகிழ்ச்சியே. இனி திட்டப்பக்கத்திலேய கருத்துக்களைத்தெரிவிக்க வேண்டுகிறேன். இங்கு வேண்டாம். மிக்க நன்றி. --த*உழவன் 16:51, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply

  • த*உழவனே! உரையாடலை நீட்டவேண்டாம் என்பதால்தான் நான் பக்கவடிவ உரையாடல்களில் அதிகம் கருத்துத் தெரிவிப்பதில்லை. அதனால்தான், dado, dado2 பக்கங்கள் இரண்டையும் கருத்துக்கணிப்புக்கு விடலாம் என்று ஓரிரு வாரம்முன்பு தெரிவித்திருந்தேன். செல்வாவும் நான்கைந்து நாட்களுக்குள் கருத்துக்கணிப்பை முடிக்கலாம் என அங்கு தெரிவித்திருந்தார்.
  • dado பக்கத்தில் விளக்கத்தின்கீழ் சொற்பிறப்பியல், பயன்பாடு அனைத்தும் வருவதுபோல் உள்ளது. dado2 பக்கத்தில் அவை தனித்தனித்தலைப்புகளில் வருகிறது. தனித்தனித் தலைப்புகளில் வந்தால், புதுப்பயனருக்குக் குழப்பம் ஏற்படும் என்று தோன்றவில்லை. பயன்பாடு என்பதை வேண்டுமானால், சொற்பயன்பாடு என்று தெளிவாக்கலாம். சொற்பயன்பாடு என்பது சொற்களின் பயன்பாட்டுக்கான பகுதி என்பதில் குழப்பம் ஏற்படும் என்றால், அது எதற்கான பகுதி என்பதில் உதவியில் தெரிவிக்கலாம்.
  • TRYPPN, பரிதிமதி போன்றோர் பயன்பாடு இடுவதில்லை, விளக்கம் இடுவதில்லை, ஆனால், அவற்றை இடாததற்குக் காரணம், அவற்றில் என்ன இடவேண்டும் என்ற குழப்பத்தால் அல்ல என்றே நினைக்கிறேன்.
  • பொருளைத் தெளிவாக்குவது படமும் பயன்பாடும். அதனால், பயன்பாடு என்பது அடிப்படைப் பக்கக்கூறு. புதியதாக ஒரு பக்கம் அமைக்கும்போது பயன்பாடு வெற்றிடமாக இருந்தாலும், புதிய பயனர் ஒருவர் பயன்பாடு என்பதைப் பார்க்கும்பொழுது அது வெற்றாக இருந்தால், அவருக்கு ஒரு பயன்பாடு இடத்தோன்றினால், அதை அங்கே இட அவருக்கு ஞாபகப்படுத்தும் அல்லவா?

கேள்விகள்

தொகு
    • ஏன் "சமக்குறியீடுள்ளxxx" வாருப்புருக்கள்? (ஏன் முன்பிருந்த எளிய "{{=ஆங்=}}", "பொருள்" போன்ற வார்ப்புருக்களை நீக்கிவிட்டு சொருகல் வார்ப்புருக்களை (nested templates) ஆண்டுள்ளீர்கள்? இப்படி செய்ய வேண்டாம் என பலமுறை வேண்டிக்கொண்டிக் கொண்டிருக்கின்றேனே - ஏன் எளிமையை வேண்டாம் என்கின்றீர்கள்?)
    • ஏன் விளக்கம், பயன்பாடு முதலியன கூடாது? (வேண்டும் என்று கூறுவோர்கள் இருக்கின்றார்களே?)
    • (பழ,கந்தசாமிக்கு மட்டும்) ஆங்கிலச்சொல்லுக்கு ஏன் மொழிபெயர்ப்பு வேண்டும் என்கிறீர்கள் என்பது விளங்கவில்லை (அவற்றை ஆங்கில விக்சனரி தருமே, அதுதானே அவர்கள் பணி? ஆங்கிலச் சொல்லுக்கு (சொற்கோவைகளுக்கு) நாம் தமிழ் மட்டுமே பொருள் தரவேண்டுமல்லவா? தமிழ்ச் சொற்களுக்கு மொழிபெயர்ப்புகள் தேவை, அது தானே முறை? (தமிழ் விக்சனரியின் முதற்பக்கத்திலலேயே கட்டம் கட்டி, "ஒரு சொல்லுக்கான வேற்று மொழி விளக்கத்தைக் காண அம்மொழி விக்சனரியைப் பார்க்கவும்" என்று இருப்பதைப் பார்க்கலாம்)). ஆங்கிலச் சொல்லுக்கான இடாய்ச்சு, பிரான்சிய மொழிபெயர்ப்பை நாம் தரவேண்டாம், அதனை ஆங்கில விக்சனரி பார்த்துக்கொள்ளும். அதற்கான இணைப்பும் இடப்பக்க பட்டியில் இருக்கும்.--செல்வா 17:24, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply
  • செல்வா, ஆங்கிலச்சொல்லுக்குத் மொழிபெயர்ப்பு என்று நான் குறிப்பிட்டிருந்தால், அது தமிழில் மொழிபெயர்ப்பு, தமிழில் பொருள் என்ற அடிப்படையில்தான். ஆங்கிலச் சொல்லுக்கு ஆங்கிலப் பொருள் என்ற பொருளில் அல்ல. பழ.கந்தசாமி 17:43, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply
நன்றி --செல்வா 19:39, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply

விளக்கம், பயன்பாடு

தொகு
  • த*உழவன், எதில் எதை இடுவது என்ற குழப்பம் புதுப்பயனருக்கு வர வாய்ப்புண்டு என்கிறீர்கள். ஒரு எடுத்துக்காட்டைப் பார்த்த உடனேயே விளக்கம் என்றால் சொல் பற்றிய தெளிவு என்றும், பயன்பாடு என்றால் ஒரு சொற்றொடரில் சொல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்று மாதிரி தரப்படுகிறது என்றும் பயனர் அறிந்துகொள்ளலாம். இது அவ்வளவு சிக்கலான விடயம் அல்ல. எளிமை என்ற பெயரில் இந்த உட்கூறுகளை விட்டுவிட வேண்டாம் என்பதே என் வேண்டுகோள். பெரும்பான்மையோர் இக்கருத்தை எதிர்ப்பதாக இருந்தால் நல்லிணக்கம் கருதி என் முன்மொழிவை விட்டுவிடலாம். இங்கே நிறுத்துகிறேன்.
  • பழ. கந்தசாமி உரையாடல் நிகழ வேண்டிய பக்கம் இதுவா என்று கேட்கிறார். அதையும் தெளிவுபடுத்தி, இனிமேல் உரையாடல் எங்கே நிகழ வேண்டும் என்றும் வழிகாட்டினால் நன்றாயிருக்கும். நன்றி!--பவுல்-Paul 17:46, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply
    • நன்றிபவுல். நீங்கள் இட்ட குறிப்புகளை ஒவ்வொரு பயனருக்கும் அறிவிக்கவும், தொகுத்தல் உதவியிலும் இணைத்துவிடலாம். இருந்தால் இணைக்கத் தூண்டுகோலாக இருக்கும் என்பதும் சீரியக்கருத்து. உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.--த*உழவன் 18:09, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply

ஒலிக்கோப்பு இருந்தும் , கோப்பு இல்லை?

தொகு

படிமம்:En-us-absolute line.ogg இப்பக்கத்திற்கான ஒலிக்கோப்பு இது. இதனை பதிவேற்றம் செய்திருந்தும், கோப்பு இல்லை என்றே காட்டுகிறது. ஏன் இப்படி? எங்கு மாற்றங்களைச் செய்யவேண்டும்? வழிகாட்டவும். --த*உழவன் 12:31, 16 செப்டெம்பர் 2010 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:absolute_line&oldid=1890640" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "absolute line" page.