தற்பொழுது [[செவிடு|செவிடாக்கு]] என்ற முறையில் உள்ளிணைப்புகள் தரப்பட்டு வருகின்றன. முதன்மைச் சொல் பக்கங்களும் உருவாக்கப்படுகின்றன. எனினும், இந்த இணைப்பை பாராமல், செவிடாக்கு என்ற கூட்டுச் சொல்லுக்கே பொருள் காண விழையும், தமிழில் குறைந்தபட்ச அறிவே உடைய ஒருவருக்கு செவிடு+ஆக்கு=செவிடாக்கு என்று பிரித்துப் பார்த்து பொருள் தேட இயலும் என்று எதிர்பார்க்க இயலுமா? இவர்களை மனதில் கொண்டு செவிடாக்கு போன்ற சொற்களை செவிடு என்ற பக்கத்துக்கு வழிமாற்றி விடலாமா? எனினும், இவ்வாறு செய்வதானால், இது போன்ற எண்ணற்ற கூட்டுச் சொற்கள், வேற்றுமை உருபு உடன் இணைந்த சொற்களில் இருந்து வழிமாற்ற வேண்டி வரும். அகர வரிசை மூலம் தேடுவோருக்கும் பயன் அதிகம் இல்லாமல் போகும். இது குறித்து உங்கள் கருத்துக்களை வேண்டுகிறேன். இன்று விக்சனரியை இங்குள்ள எளிய படிப்பறிவே உள்ள தமிழர் இருவருக்கு அறிமுகப்படுத்தினேன். மிகவும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டனர். பிற ஆங்கிலம் - தமிழ் இணைய அகரமுதலிகளைப் போன்றன்றி கடினமான மற்றும் துறை சார் சொற்களுக்கு மட்டுமன்றி, எளிய சொற்களுக்கும் விளக்கம் தருவது தமிழ் விக்சனரியின் சிறப்பாக விளங்கும் என எதிர்ப்பார்க்கிறேன். எனினும், கோரப்படும் சொற்கள் என்பது போன்ற சொற்களின் பொருளையே அவர்களால் விளங்கிக் கொள்ள இயலவில்லை. தமிழ் விக்சனரியின் மொழி நடை, சொல் விளக்கங்கள் மிகக் கடினமாக உங்களுக்குத் தோன்றினால் தெரிவிக்கவும். எளிய தமிழறிவுடையோரும் தமிழ் விக்சனரியை பயன்படுத்தத் தக்க அளவு எளிமையாக விக்சனரியை வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் (அதே வேளை, தரம் குறையாமலும் இருக்க வேண்டும்.). ஏனெனில், அவர்கள் இத்தளத்தை அதிகமாகப் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம். ஏனேயோர் dictionary.com போன்ற ஆங்கிலம்- ஆங்கிலம் அகரமுதலித் தளங்களை நாடிச்செல்லவே வாய்ப்புகள் அதிகம். --ரவி 21:12, 27 ஆகஸ்ட் 2006 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:deafen&oldid=14112" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "deafen" page.