செயலாண்மைத் திறன்; செயலாண்மைத் திறம்; என்னும் இரு பொருள்களும் பொருந்தவில்லை என நினைக்கின்றேன். Dipolomacy என்பது பொதுவாக நல்லிணக்கச் செயற்பாடு, பேச்சு ஆகும், பணியுறவில் நுணுக்கமாக செயற்படுவதும் சொல் நயத்துடன் எதனையும் கூறுவதும் அடங்கும் என நினைக்கின்றேன். இது பெரும்பாலும் நாடுகளுக்கிடையே அவர்களின் அரசுத்தூதுவர்களால் நிகழும் உறவாட்டங்களைப் பற்றியது. நாகரிக ஒழுக்கம் என்றும் சிலர் சொல்கிறார்கள். இதமாகப் பேசுவது, நாசூக்காக நடப்பது என்றும் கூறுகின்றார்கள். பண்பான உறவாட்டம் எனலாம். பொதுவாக நயமாக நடப்பது நயமாகப் பேசுவது என்பதால் நயன்மை அல்லது நயம் எனலாம். இன்சொலல், இன்சொற்சொலல் என்பதும் diplomatic talk எனலாம். நயத்தக்க நாகரிகர் என்னும் திருக்குறளையும் கருத்தில் கொண்டால், நயம், நயன்மை என்பது பொருந்து என்று நினைக்கின்றேன். செய்நயம், சொன்னயம், நயவுறவு, நயனுறவு?? முதலியவற்றைச் தக்கச் சூழலில் பயன்படுத்திப்பார்க்கலாம்.--செல்வா 22:24, 16 டிசம்பர் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:diplomacy&oldid=903560" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "diplomacy" page.