பேச்சு:experimental physics

ஆய்வியல் என்பது research என்பது தொடர்பானது. இது கருத்தியலானதாக இருக்கலாம், கருத்தியலிலே கூட ஒப்புருவாக்கமுடைய (modeling and simulation) முறைகளாக இருக்கலாம். experimental என்பது செய்முறையானது. எனவே செய்முக இயற்பியல் எனலாம். theoretical physics என்பதைக் கருத்திய இயற்பியல் என்று பிரித்துச் சொல்வதே எளிமையாக இருக்கும். எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். --செல்வா 22:20, 1 மார்ச் 2010 (UTC)

முன்னாளில் experiment என்றால் சோதனை என்று பொருள் கூறப்பட்டு வந்தது; ஆனால், தற்போது ஆய்வு என்று தான் சொல்லிக் கொடுக்கின்றோம்; procedure (of the experiment) என்பது செய்முறை என்று கூறப்படுகிறது. மேலும், experimental pharmacology என்பதற்கு விக்சனரியில் (அதாவது, தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியிலிருந்து) ஆய்வு மருந்தியல் என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது; இதை அடிப்படையாக வைத்து தான் ஆய்வு+இயற்பியல் = ஆய்வியற்பியல் என்ற புது சொல்லை ஏற்படுத்தினேன்.
ஆய்வு, ஆராய்ச்சி என்னும் சொற்கள் research. வீட்டில் கீரையை ஆய்வது என்பது கூட கீரையைக் கூர்ந்து பார்த்துவேண்டியதை வைத்துக்கொண்டு வேண்டாததை விலக்குவதாகும். அதாவது சரியானவற்றை (வேண்டியதைத்) தேர்ந்து கண்டுபிடித்தல். ஆய்வு என்பது பிரித்தல் (நுணுக்கமாக அறிந்து தேர்ந்து பிரித்தல்) என்னும் பொருள் கொண்டது. இணையப் பல்கலை அகராதியில் இருக்கும் இச்சொல் சரியல்ல. அது ஆய்வு செய்து தற்காலிகமாக சோதனைக்காக உருவாக்கப்படும் மருந்தியல் என்பதாக இருக்குமோ என எண்ணுகிறேன்.எப்படிப் பார்க்கினும் experimental என்பது ஆய்வு, ஆராய்சி அல்ல. அப்பொழுது experimental research, theoretical research என்பனவற்றுக்கு என்ன சொல்வார்கள்? --செல்வா 04:57, 3 மார்ச் 2010 (UTC)
பரிதிமதி, ஆய்வு என்று சொல்லிக்கொடுத்தல் தவறு. தக்கவர்களிடம் சொல்லி திருத்தச் சொல்லுங்கள்!--செல்வா 04:59, 3 மார்ச் 2010 (UTC)

Start a discussion about experimental physics

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:experimental_physics&oldid=633249" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "experimental physics" page.