பேச்சு:falx cerebri

புதிய சொல்லாக்கப் பரிந்துரை

தொகு
falx cerebri

Falx : அரிவாள் வடிவம், cerebrum : மூளையம்

அரிவாளுரு மூளைய மடிப்பு
falx cerebelli

cerebellum : மூளி

அரிவாளுரு மூளிய மடிப்பு
--சி. செந்தி 16:25, 22 ஆகஸ்ட் 2010 (UTC)

வளைந்த, வள்,வங்கி என்பன போதுமே. ஏன் அரிவாளுரு? கொடுவாள் என்பதன் பொருளும் வளைந்த வாள். கொடு என்பதும் வளைவைக் குறிக்கும் (இதுவே முதற்பொருள், கெட்ட, தீய என்னும் பொருள்கள் பின்னர் விரிந்த பொருள்கள். நேர் பாதையில் இருந்து, விலகிய, வளைந்த என்னும் பொருளில்). மூளை வளைமடிப்பு = falx cerebri என்றும், falx cerebelli என்பதைப் பின்மூளை வளைமடிப்பு என்றும் கூறலாமா? ஆங்கிலச்சொற்களுக்கான சொற்பிறப்பிய அறிந்தபின்னர் மீண்டும் கருத்திடுகின்றேன்.--செல்வா 17:07, 22 ஆகஸ்ட் 2010 (UTC)

நுதல் எலும்பு தமிழ் விக்கிபீடியாவில் எழுதியபோது வந்த இடையூறுகள் இவை; பல சொற்களிற்கு சரியான மொழிபெயர்ப்பு இல்லாததால் அதனை ஒத்த ஒன்றை எழுதுகின்றேன், பின்னர் தங்கள் போன்றவர்களின் உதவியுடன் இந்தச் சொற்களை ஆராய்ந்து மாற்ற முயலுகின்றேன்.
  • மூளை வளைமடிப்பு என்பது falx cerebri க்கு பொருந்துகிறது, ஆனால் பின்மூளை வளைமடிப்பு என்று falx cerebelli அழைப்பதைவிட சிறுமூளை வளைமடிப்பு அல்லது மூளி வளைமடிப்பு என்பது சரியாகப் பொருந்தும் என நினைக்கிறேன், ஏனெனில் பின்மூளை எனப்படுவது hind brain என எடுத்துக்கொள்ளப் படலாம் (hind brain = Pons + Medulla ), இது முளையவியல் தொடர்பாக சிக்கலை ஏற்படுத்தும்.--சி. செந்தி 18:13, 22 ஆகஸ்ட் 2010 (UTC)
ஆமாம், பின்மூளை என்பது பிழையானது. தமிழ்நாட்டில் cerebellum என்பதை சிறுமூளை என்றும், cerebrum என்பதைப் பெருமூளை என்பதும் தமிழ் நாட்டில் வழக்கில் உள்ள சொற்கள். எனவே சிறுமூளை என்பது சரியானதே. மூளி என்றால் தமிழில் வேறுபொருள் உண்டு (கூர் இழந்தவள், சிறப்பு இழந்தவள் என்பது போன்றபொருள்கள். மூளி என்றால் கூர் இல்லாதது, மழுங்கியது என்று பொருள்). --செல்வா 18:49, 22 ஆகஸ்ட் 2010 (UTC)--செல்வா 18:57, 22 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:falx_cerebri&oldid=779988" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "falx cerebri" page.