ஓரிரவு உறவு பொருத்தமான சொல்லாக உள்ளது. ஓரிரவு மோகம், ஓரிரா, ஓரிரா மோகம், ஒருநாள் மோகம், ஓரிரவு ஈர்ப்பு (ஓரிரவீர்ப்பு), வீழ்வு, ஒருநாள்மயக்கம், ஓரிரவுமுயக்கம், ஒருநாட்கலவி, ஓரிராக்கலவி (ஓர் இரா கலவி), இராவீழ் என்பதுபோலக் கூறலாம். இப்படியான சொற்களைப் பெயர்ப்பது சற்று கடினம், ஆனால் ஓரிரா போன்ற சொற்கள் "தக்க சூழலில்" "தக்கவாறு" பயன்பாடுத்தினால், அப்பொருள்களில் கால் கொள்ளக்கூடும். பிலுக்குதல், பிலுபிலு என்று பிடித்தல், புல்லியர், புல்லறிவாளர் என்பதை எல்லாம் கொண்டு பிலுங்கு (விலுங்கு - விலகிய அல்லது விலக்கிய ஒழுக்கத்தில் நடத்தல்) என்று புதுச்சொல்லையும், fling என்பது போல பயன்படுத்தலாம். விசுக்கென்று தன்னிலை பிறழ்ந்து நடத்தலால், விசுக்கு, விசுங்கு என்றும் சொல்லலாம். குழந்தை அழும்பொழுது விசும்பி அழுதது, விட்டுவிட்டு மூச்சு இழுத்து அழுதது என்பதிலும் விசுக் என்பதன் மற்றொரு வடிவம் உள்ளது. அறவொழுக்கத்தில் இருந்து பிரிந்து வழுக்கி நடப்பதற்கு வழுக்கு, விசுக்கு (திடீர் வழுக்கல்) என்று பொருள் கொள்ள இடம் உள்ளது. இங்கு கடைசியாக சொன்ன இவையெல்லாம் பொருள்நீட்சி, தேவை கருதி செய்த திரிப்பு வழி வருவன (சில செல்லாத வகையாகவும் இருக்கலாம்). ஓரிரா வழு, ஓரிராவழுக்கு எனலாம்.--செல்வா 19:28, 3 ஜூன் 2010 (UTC)
  • one-night stand, fling இரண்டுமே ஒரு விசிறலை, விட்டேத்தித்தனமான உறவைக் குறிக்கின்றன். stand என்பது ஒரு உயிரற்ற தன்மையையும், fling என்பது தூக்கி எறியப்படும் தன்மையையும் உணர்த்துகின்றன. அவ்வாறு வருமாறு மொழிபெயர்க்க முயற்சி செய்யவேண்டும். ஈர்ப்பு, உறவு என்பனவற்றை விட, மோகம் அதைக்குறித்தாலும், stand-ல் உள்ள உயிரிலாத்தனம் அதில்கூட இல்லை. பழ.கந்தசாமி 19:59, 3 ஜூன் 2010 (UTC)

Start a discussion about fling

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:fling&oldid=657540" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "fling" page.