பேச்சு:hormone
hormone என்னும் ஆங்கிலச் சொல்லுக்கான கருத்தாக நொதி அமையாது எனவே "நொதி" இங்கிருந்து நீக்கப்படுகிறது. --சி. செந்தி 13:38, 20 ஜூலை 2010 (UTC)
மேலும் சில
தொகுhormone :இயக்குநீர்
hormone :சுரப்புநீர்
நன்றி
தொகுசெந்தி, மிக்க நன்றி. ஆம் அது தவறான சொல். பிழை திருத்தையமைக்கு நன்றி. மருத்துவ, உயிர்வேதியியல் துறைகளிலும்பிற துறைகளிலும் இப்படித் தவறாக உள்ள சொற்களை நீக்கிவிடுங்கள் (அது பற்றிய குறிப்பு ஒன்றையும் இப்படிப் பேச்சுப் பக்கத்தில் இடுவது நல்லது). --செல்வா 15:57, 20 ஜூலை 2010 (UTC)
வளரூக்கி, வளர்ச்சி நெறிப்படுத்தி
தொகு- மேலும் இங்கு வளரூக்கி, வளர்ச்சி நெறிப்படுத்தி எனப்படும் பதங்கள் ஓர்மோன்களின் தொழிலைச் சொல்வது போன்று அமைகிறது, ஆனால் ஓர்மோன்கள் பல்வேறு செயற்பாடு கொண்டவை. . Growth hormone இவ்வாறு அழைக்கப்படலாம். இதற்கு ஆதாரமும் இல்லை, எனினும் வளரூக்கி என்று தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரை உள்ளது, எனவே இதனை என்ன செய்வது என்று புரியவில்லை.
ஒர்மோன் என்றால் (from Greek ὁρμή - "impetus") உந்துதல், இயக்குதல் என்பதற்கமைய இயக்கு நீர் சரியான பதமாக உள்ளது.--சி. செந்தி 14:13, 23 ஜூலை 2010 (UTC)
- growth hormone என்பதில் இருந்துதான் வளரூக்கி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஏதேனும் நன்கறிந்த ஒரு வினையால் பெயர் சூட்டப்படுவது சொல்லாக முறைகளில் ஒன்றுதான். ஆனால் உந்துதல் என்பது சரியான பொருளைத் தருமென்றால், உந்துகி, உந்துனி என்றும் சொல்லலாம்ம். அது நீர்மம் என்றால் உந்துநீர் என்றும் சொல்லலாம். இயக்குநீர் என்பதும் நன்கு பொருந்தும். இது வளரூக்கி என்று முன்னர் அழைக்கப்பட்டது என்று ஒரு வரி சேர்த்தால் போதும். அறிவியல் உலகிலும் இப்படிப் பெயர் மாற்றங்கள் நிகழ்வது புதிதல்ல. நீங்கள் மிகுந்த அக்கறையுடன் துறையறிவைப் பக்ரிவதைக் காண மிக மகிழ்ச்சியாய் இருக்கின்றது.--செல்வா 14:32, 23 ஜூலை 2010 (UTC)