பேச்சு:macro economics

இச்சொல் பெருவின(?) (அல்லது பேரின) என்னும் உரிச்சொல் பெற்றிருந்தால் நன்றாக இருக்கும். பெரும்+இயம் = பெருமிய பொருளியல் (இது பேரிய என்றும் இருக்கலாம்!!) என்றாலும் சரியாக இருக்கும். ஒரு கருத்துக்காக இடுகின்றேன். கட்டாயம் மாற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. பரு என்றாலும் பருத்த (= பெரிய) என்று பொருள்பட்டாலும், அது பருப்பொருள், திண்மப் பொருள் கெட்டியான பொருள் போன்ற பொருள்நிறம் சுட்டும் (நிறம் = வகை, தன்மை, இயல்பு). பெரிய என்னும் உரிச்சொல் மிகவும் பொதுவான சொல். பெரிய, பெரும், பெருமை போன்ற வடிவங்கள் இருப்பதால் பெருவிய(??) (பெருமிய) (பெரும் இயம் = பெரிய தன்மையைப் பற்றிய (பொருள்) இயல்) என்பது போல சொல்லலாம். பேரியப் பொருளியல் என்பது சரியான சொல்லாக இருக்கும் என்பது என் கருத்து.--செல்வா 15:05, 2 ஜூன் 2010 (UTC)

  • பருவினப் பொருளியல் எனக்கும் சரியாகப் படவில்லை. பேரினப் பொருளியல் விக்கிப்பீடியாவிலிருந்து வந்தது. பேரியப் பொருளியல் நன்றாக உள்ளது. நன்றி பழ.கந்தசாமி 15:12, 2 ஜூன் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:macro_economics&oldid=656726" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "macro economics" page.