பேச்சு:mascot
சொல் குழுமத்தில் இருந்து--
மாசுகாட்டு (mascot) என்னும் சொற்கருத்தில் தமிழில் கூறும் வழக்கம் இல்லை. ஆங்கிலத்திலும் இது அண்மையில் ஆட்சி பெற்ற சொல்லே. பிரான்சிய மொழியில் 1867 இல் " La Mascotte" என்னும் பெயரில் எடுமாண்டு ஔடரான் (Edmond Audran) வழி வெளிவந்த உணர்விசைக் குட்டிநாடகம் (an operetta) ஒன்றால் பரவலமாகி ஆங்கிலத்தில் முதன்முதலாக 1881 இல்தான் mascotte என்று வழங்கினார்கள் (இச்செய்திகள் ஆங்கில ஆக்ஃசுபோர்டு அகராதி வழி அறிந்து பகிர்கின்றேன்). ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகராதி ((OED) "1881 H. B. Farnie & R. Reece Mascotte i. 4 Ah! blest their lot whom fate shall send A true Mascotte, a fairy friend!.. Luck's his for ever!" (copyright OED) என்பதை முதல் சுட்டாகக் காட்டுகின்றது. 1918 ஆம் ஆண்டில் இருந்து சற்று சீராக mascot என வழங்குகின்றார்கள். ஆக்ஃசிட்டான் (Occitan) என்னும் பிரான்சிய மேற்குப்பகுதி மொழியில் (இதனை Langue d'Oc என்பார்களாம்), மாசுகாட்டு என்பது witch (சூனியக்காரி) என்னும் பொருளில் 19-ஆம் நூற்றாண்டில் ஆண்டார்களாம். இதுவும் பிற்கால இலத்தீன் மொழிச்சொல்லாகிய masca என்னும் சொல்லில் இருந்து வந்ததாம். இதன் பொருள் முகத்தில் அணியும் முகமூடி, ஆனால் முன்னர் spectre, spell எனப்படும் பொருளில் (தமிழில் அணங்கு!!) ஆளப்பட்டதாம். இன்று முகத்தில் அணியும், அல்லது முகப்பாகக் காட்சியளிக்கும் நற்பேற்றுக்கு அடையாளமாக நிற்கும் ஒருவரோ, ஒன்றோ என்னும் பொருளில் mascot என்பதை முகடி எனலாம். முகணி, முகதி என்றும் அழைக்கலாம். முக, முகப்பு, முகணை என்பன முன் நிற்பதையும் முக்கியத்துவத்தையும், முதன்மையையும் சுட்டும்.
இன்னும் சிலவிதமாகவும் சொல்லலாம். தமிழில் ஆள் என்பதுஒரு விகுதி (கழக அகராதியைப் பாருங்கள்). ஆள்+அம் சேர்ந்து ஆளம் என்பதும் ஒரு விகுதி. அடையாளம், நீராளம், தாராளம், ஏராளம் என்பதில் எல்லாம் ஆளப்படும் விகுதி. எனவே அடையாளம் போல் ஒலிக்க வேண்டுமெனில், நற்றாளம், நற்றாளி என்றும் சொல்லலாம. அதென்னங்க புரியலையே என்பார்கள் சிலர், mascot என்றாலும் புரியாது இருக்கும் போது ஏற்பார்கள்- அதை மட்டும் ஏங்க ஏற்கின்றீர்கள் என்று கேட்கலாம். முகப்பம் என்றும் சொல்லாக்கி ஆளலாம். முகப்பு என்பது முன்னே அடையாளமாக நிற்பது என்பது போன்ற பொருளையும் சுட்டும். ஆகவே கீழ்க்காணும் சொற்களைக் கருதுங்கள்:
1)முகடி, (2)முகணி, 3) முகதி 4) நற்றாளம், 5) நற்றாளி, 6) முகப்பம்
தக்க சூழல்களில் பலமுறை வழங்கப்பெற்றால் இச்சொற்களில் எதுவொன்றும் நிலைப்பெறும் வாய்ப்புள்ளது.
Start a discussion about mascot
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve mascot.