பேச்சு:materialism

பொருண்மை என்பதினும் பொருண்மியம் என்பது சரியாக இருக்குமோ எனத் தோன்றுகின்றது. பொருண்மிய வாதம் என்றும் கூறலாம், ஆனால் வாதம் என்பது தேவை இல்லை. பொருண்மை என்பதை இன்னும் சில இடங்களில் mass (நிறை) என்பதற்கு ஈடாகப் பயன்படுத்துகின்றனர் (weight = எடை). பொருளியல், பொருளறிவியல் என்பன முறையே economics, material science (and engineering). Materials engineering என்பதற்குத் தனியான சொல் வேண்டுமெனில், பயன்ம பொருளறிவியல் எனலாம். அல்லது பயன்முக பொருளறிவியல் எனலாம். Applied என்னும் சொல்லுக்கு ஏறத்தாழ ஈடாக பயன்ம, பயன்முக என்னும் முன்னொட்டுச் சொற்களை ஆளலாம். --செல்வா 21:37, 6 மார்ச் 2010 (UTC) capital = முதல். capitalism = முதலாளியம் (அல்லது முதல் முன்மையம், முதலியம்; முதலாளித்துவம் என்பதை முதலாளியம் என்றே சுருக்கமாகக் கூறலாம்) --செல்வா 21:41, 6 மார்ச் 2010 (UTC)


செல்வா!

  • "சாதகனோ அல்லது அதன் உச்சத்தை அடைந்தவனோ ஒரு நிலையிலும் இந்த பொருண்மை உலகின் இயக்கத்தில் தலையிட முடியாது. அவன் எவருக்கும் நோய்களை குணமாக்க முடியாது". [1].
  • அதிகாரமட்டம் பற்றிய பொருண்மையான (concrete, materialist), உறவுரீதியான (relational) ஆய்வுக்கு இட்டுச்செல்ல வல்லது [2]
  • வேறு வலைத்தளங்களில் metaphysics, mysticism போன்ற பதங்களுக்கும் பொருண்மை பயன்படுத்தப்படுவது போலத் தோன்றுகிறது.
  • உங்கள் குறிப்பைப் பார்த்தபிறகு, ஜெ.மோ. பொருண்மை உலகு - material world என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார் என்பதை உணர்ந்துகொண்டேன்.
  • பொருண்மியம் எனக்குப் பிடித்திருக்கிறது பழ.கந்தசாமி 22:22, 6 மார்ச் 2010 (UTC)

பழ.கந்தசாமி 22:22, 6 மார்ச் 2010 (UTC)


நன்றி பழ.கந்தசாமி.
தமிழில் பொருள் என்னும் சொல் பொருள் மிக்கது. கடவுளுக்குப் பொருள் என்று பெயர். பணம் சொத்து முதலியவற்றுக்கும் பொருள் என்று பெயர். பருமை உடையதும் பொருள், கருத்தில் உள்ள நுண் உருவுக்கும் கருத்துக்கும் பொருள். ஒரு சொல்லின் பொருள் (சொல் சுட்டும் ஒன்று; சொல்லை உடலாகக் கொண்ட கருப்பொருள்). பொருள் என்றால் பயன் என்றும் பொருள். எனவே பொருண்மை என்னும்பொழுது semantic value, semantic value system (meaninngness - no such English word exists, but பொருண்மை can mean that)? what a thing is made of (mass)? purpose, result (பயன்), ultimate purpose (God)? Capital?Matter, thing? Concept? Money? எனவே பொருண்மை என்பதைச் சற்று பொறுமையாகத்தான் பொருள்கொள்ள வேண்டும். பொருண்மியம் என்றாலும் இதே சிக்கல்தான். ஆனால் சீராகப் பொருள் வேறுபாடுகள் கொண்டு வழங்கி வர வேண்டியிருக்கலாம். புறப்பொருள் அடிப்படையாகக் கொண்டதென்றால் புறப்பொருண்மியம் என்றுகூடச் சொல்லலாம். சிந்தனையைக் கிளரவே சொன்னேன். நீங்கள் பல வழக்கு நடைகளைத் தொகுத்து வழங்குவது மிக அருமை! இவற்றையெல்லாம் தானியங்கியாய் ஒரு தொகுப்பாகவும் வார்ப்புருக்கள் மூலம் செய்ய முடியும் என எண்ணுகின்றேன். பல்வேறு ஆசிரியர்கள், நூல்கள், இதழ்கள் (நாளிதழ்கள், கிழமை இதழ்கள், மாத இதழ்கள்) என்று தேர்வது மிக நல்லது. மொழித் தொகுதி (corpus linguistics) பற்றி தமிழ்நாடு அரசு ஆய்வுகள் தொடங்கவிருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது (பேரா.அனந்தகிருச்^ணன் அண்மையில் அறிவித்தார்). பேரா. தெய்வசுந்தரம் (சென்னை பல்கலை) ஒருவர்தான் இது தொடர்பாக ஆய்வதாகவும் கூறினார்கள்.--செல்வா 01:00, 7 மார்ச் 2010 (UTC)

  • மக்கள் தொலைக்காட்சியில், மொழித் தொகுதி பற்றிய நிகழ்ச்சி வாரம் இருமுறை வருகிறது. கோடைப் பண்பலையிலும் வருகிறது எந்தெந்த நாட்கள், எந்நேரத்தில் என்பதை இவ்வாரம் முழுவதும் கவனித்து, ஆலமரத்தடியில் குறிப்பிடுகிறேன். த*உழவன் 01:26, 7 மார்ச் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:materialism&oldid=633246" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "materialism" page.