பேச்சு:overeating
போசனப்பிரியம் என்பது அதிக உணவை உட்கொள்ளும் ஆவல்துடிப்பு அல்லவா? ஓவர் ஈட்டிங் என்பது மிகுதியான உணவை உட்கொள்ளுதல் (அல்லது அப்பழக்கம் மட்டுமே). இவற்றுக்கு வேறுபாடு உண்டல்லவா?--செல்வா 17:50, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
- சாப்பாட்டு விரும்பி, சாப்பாட்டுப் பிரியன், சாப்பாட்டுராமன் என்பது இன்னும் ஒரு வேறுபாடு (glutton?)--செல்வா 17:52, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
- செல்வா, துல்லியமாக வேறுபடுத்திக் காட்டியுள்ளீர்கள். ஒத்துக்கொள்கிறேன். கிறித்தவ மரபில் தலையாய பாவங்கள் ஏழு என்பர் (காண்க: (seven deadly sins). அவற்றுள் ஒன்று gluttony. அதை (அக்கால) தமிழில் போசனப்பிரியம் என்று பெயர்த்தனர். அதைத்தான் சுட்டிக்காட்டினேன். என்னிடமுள்ள பெர்சிவல் அகரமுதலியில் glutton (பேரூணன், கழியூணன், போசனப்பிரியன், வயிறுதாரி); gluttonize (அளவுகடந்துண், மிதமிஞ்சி உண்); gluttony (பேருண்டி, போசனப்பிரியம், மீதூண்)என்று மிக விரிவாகவே உள்ளது. என்னே தமிழின் (சொல்லாக்க) வளமை! :)--பவுல்-Paul 18:39, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
- மிக்க நன்றி. ஒன்று சொல்வதுண்டு. உங்களிடமும் ஒரு 10 உருவா, என்னிடமும் ஒரு 10 உருவா இருப்பதாகக் கொள்வோம். இப்பொழுது நாம் இருவரும் நம் பணத்தை பரிமாறிக்கொண்டால், இருவரிடமும் பத்து பத்து உருபாய்தான் இருக்கும். இதே போலத்தான் ஒவ்வொருத்தரிடமும் வடை ஒன்று இருந்தாலும். ஆனால் உங்களிடம் ஒரு கருத்து இருந்து என்னிடமும் ஒரு கருத்து இருந்தால், நாம் கலந்துரையாடிப் பகிர்ந்து கொண்டால் இருவரும் இரண்டு கருத்துகள் கொண்டிருப்போம். இவை இன்னும் குட்டி போடவும் வாய்ப்புண்டு (கூடுதலான எண்ணங்கள் இருப்பதால்) :) பேரூண், பேருண்டி எளிய அருமையான சொற்கள் கழிபெரும் உவகை, கழிநெடிலடி என்பனவற்றில் வரும் கழி என்பதும் எச்சு, மிகுதியை நன்கு சுட்டும் நன்றி ஐயா!--செல்வா 20:48, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
- இருவரும் ரசிக்கும் அந்த வடையை எனக்கும் தந்தமைக்கு, நானும் இவைபோன்ற விவாதம் மூலம் எடை போட வாய்ப்புண்டு :). பொருளில் உள்ள 'விரும்பி' என்ற சொல் நீக்கப்படவேண்டியதா? தேவையான மாற்றங்களைச் செய்துவிடுங்களேன். பழ.கந்தசாமி 21:12, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
- மிக்க நன்றி. ஒன்று சொல்வதுண்டு. உங்களிடமும் ஒரு 10 உருவா, என்னிடமும் ஒரு 10 உருவா இருப்பதாகக் கொள்வோம். இப்பொழுது நாம் இருவரும் நம் பணத்தை பரிமாறிக்கொண்டால், இருவரிடமும் பத்து பத்து உருபாய்தான் இருக்கும். இதே போலத்தான் ஒவ்வொருத்தரிடமும் வடை ஒன்று இருந்தாலும். ஆனால் உங்களிடம் ஒரு கருத்து இருந்து என்னிடமும் ஒரு கருத்து இருந்தால், நாம் கலந்துரையாடிப் பகிர்ந்து கொண்டால் இருவரும் இரண்டு கருத்துகள் கொண்டிருப்போம். இவை இன்னும் குட்டி போடவும் வாய்ப்புண்டு (கூடுதலான எண்ணங்கள் இருப்பதால்) :) பேரூண், பேருண்டி எளிய அருமையான சொற்கள் கழிபெரும் உவகை, கழிநெடிலடி என்பனவற்றில் வரும் கழி என்பதும் எச்சு, மிகுதியை நன்கு சுட்டும் நன்றி ஐயா!--செல்வா 20:48, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
Start a discussion about overeating
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve overeating.