பேச்சு:real
அகம் என்றாலே உள்ளே என்பதனையும் குறிக்கிறது.உள்ளகம் என்றால்? விளக்குங்கள்--த*உழவன் 05:08, 25 ஜூலை 2010 (UTC)
- யார் உள்ளகம் என்று இட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால் உள்ளகம் என்றால் ஒன்றின் உண்மையான தன்மை/இயல்பு/இருப்பு என்று பொருள். உள் என்றால் அகம் புறம் என்பதுபோல உள்ளே வெளியே என்பதில் சுட்டப்படும் இடப்பொருளும் ஒரு பொருள்தான். ஆனால், உள் என்றால் இருப்பது (உள்ளது) என்றும், உண்மை (உள்ளது உண்மை) என்றும், ஆன்மா என்றும் வேறுசில பொருள்களும் கொள்ளும். என்ன உள்ளது என்றால் என்ன இருக்கின்றது என்று பொருள். உள்--> உண்--உண்மை ஆகும். உடலுக்கு உள்ளே உயிர்வாழ (இருக்க) இடும் பொருள் உணவு (அதனை உட்கொள்ளுதல் உண் என்னும் வினை).உள்ளது என்றால் உலக நடப்பு (இதனை ஒரு சிறுபான்மையர் யதார்த்தம் என்பர். ). தமிழில் உள்ளதுதானே, உள்ளநிலைமை, நடப்பு, உள்ளநடப்பு என்றெல்லாம் கூறுவதன் பொருள் உண்மையாக உலகில் நடக்கும், இருக்கும் நிலை. எனவே உள்ளகம் என்றால் ஒன்றின் உண்மை நிலை (பொய்மை அல்ல, மாயம் அல்ல, பிறழ்வு அல்ல, மயக்கம் அல்ல - உள்ள தன்மை, உண்மைத்தன்மை). எனவே உள்ளகம் என்றால் ஒன்றின் உண்மைப்பண்பு, உண்மையான தன்மை/இருப்பு. --செல்வா 17:39, 25 ஜூலை 2010 (UTC)
நில்-->நிற்றல்->நிற்றம்->நித்தம்-->நிச்சம்--> நிசம் என்றும் கொள்வர். நிஜம் என்று கூறுவது சலம்(நீர்) (சலசலத்தல், சலதி=கடல்) என்பதைச் ஜலம் என்று சொல்வது போல என்றும் கொள்ளலாம். இவை எல்லாம் முறைப்படி உறுதி செய்யாதவை. மக்கள் நிசமாவா, நெசமாவா என்று கேட்பது காணக்கூடியது என்பதால், நிசம், நெசம் என்று இட்டிருக்கின்றேன். நிஜம் என்றும் எழுதலாம்.--செல்வா 18:40, 25 ஜூலை 2010 (UTC)
- உள் என்பதிலுள்ள உள்ளதை உணர்ந்தேன். நிஜம் என்பதனை விட, நிசம் என்பதனையே விரும்புகிறேன்.--த*உழவன் 01:36, 26 ஜூலை 2010 (UTC)
Start a discussion about real
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve real.