பேச்சு:sadist
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Sundar
எதுவும் பிழையா தெரியவில்லை. https://www.facebook.com/groups/tamilsol/permalink/489447547859212/ - இங்கு நான் தெரிவித்துள்ளபடி Sadist என்பதை துன்புறுத்துவேட்கையாளன், தாக்கின்பி, துன்புறுத்தல்விரும்பி எனலாமென நினைக்கிறேன். -- Sundar (பேச்சு) 12:09, 1 ஆகத்து 2014 (UTC)
- தாக்கின்பி - இப்பெயர் மிகவும் பிடித்துள்ளது. இம்மூர்த்தி சிறிதெனினும், கீர்த்தி பெரிது!. பொருத்தமான இச்சொல்லிற்கு மாற்ற எனது ஆதரவு. இங்குள்ள உசாத்துணைப் பகுதியை நீக்கவிடலாமா? அல்லது வேறு மாற்றம் செய்யலாமா? {{ஆங்கிலம்-ஆதாரங்கள்}.} என்ற கீழுள்ள வார்ப்புருவில் என்ன மாற்றங்கள் செய்தால், அது தமிழ் இணையக்கல்விக் கழக இணையப்பக்கத்தில் உரிய பக்கத்திற்குச் செல்லும். தற்போது அது பொதுபக்கத்திற்கேச் செல்கிறது. குறிப்பிட்ட சொல்லுக்கான தேடல் விளைவு அதில் வர என்ன செய்ய வேண்டும்.? வழிகாட்டுக!.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sadist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்
--தகவலுழவன் (பேச்சு) 13:40, 1 ஆகத்து 2014 (UTC)
- ஏற்புக்கு நன்றி, தகவலுழவன். த.இ.க. இயக்குனரிடம் அந்தந்தப் பக்கங்களின் வலைவரி உசாவின் முகவரிப்பெட்டியில் வருமாறு மாற்றம் செய்யக் கேட்டிருக்கிறேன். தற்போது அவர்கள் மேற்கொண்டுவரும் வலைத்தளச்சீரமைப்பில் செயற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். அதன்பின் அவர்களது வலைவரி எந்த வார்ப்பில் வருகிறதோ அதைப்பொருத்து மாற்றிவிடலாம். இப்போதைக்கு இந்தச்சொல்லுக்கான விளக்கத்துக்கு அவர்களின் தேர்வுமுடிவுப்பக்கத்தின் ஒரு சட்டத்தைமட்டும் எடுத்து வலைவரி பெற்றுள்ளேன் (இதைச்சான்றாகக் காட்டவியலாது). http://www.tamilvu.org/slet/technical_glossary/tech_engser.jsp?selsub=All&schsel=full&editor=sadist&key_sel=English&GO.x=53&GO.y=28 - இங்கு அஞரின்பர், கொடுமை இழைப்பதில் இன்பம் காண்பவர் எனத்தந்துள்ளார்கள். -- Sundar (பேச்சு) 06:43, 20 ஆகத்து 2014 (UTC)
- தங்களது முயற்சி எப்பொழுதும் போல உயர்வுடையதாக இருப்பதில் மகிழ்ச்சி. வழமைப்போல, அச்சீராக்கப்பணியைச் செய்ய தகவல் எந்திரன் காத்திருப்பான். தாக்கின்பி -யே, எளிமையான, அழுத்தமான சொல் . மற்றவை பொருள் தரவல்லது. உள் அளவில் தாக்கத்தைத் தருவது, தாக்கின்பியே. வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 08:32, 20 ஆகத்து 2014 (UTC)
- நன்றி தகவலுழவன். -- Sundar (பேச்சு) 13:13, 20 ஆகத்து 2014 (UTC)
- தங்களது முயற்சி எப்பொழுதும் போல உயர்வுடையதாக இருப்பதில் மகிழ்ச்சி. வழமைப்போல, அச்சீராக்கப்பணியைச் செய்ய தகவல் எந்திரன் காத்திருப்பான். தாக்கின்பி -யே, எளிமையான, அழுத்தமான சொல் . மற்றவை பொருள் தரவல்லது. உள் அளவில் தாக்கத்தைத் தருவது, தாக்கின்பியே. வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 08:32, 20 ஆகத்து 2014 (UTC)