பேச்சு:triple

Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

பரிதிமதி, நன்றி. மூற்றை = triple (மும்முடங்கு) என்பது நல்ல சேர்ப்பு. இச்சொல் கழக அகராதியிலும் உள்ளது. ஒற்றை, இரட்டை என்பது போல மூற்றை என்பது மூன்றாக உள்ள நிலையையும் குறிக்கும். ஆனால் நாற்றை, ஐற்றை, ஆற்றை, ஏற்றை, எண்டை, ஒன்பாற்றை, பற்றை என்றெல்லாம் சொற்கள் இப்பொருள்களில் இல்லை. ஏற்றை என்றால் "ஆற்றலோடு கூடிய ஆண்விலங்கு" அல்லது ஆண் அரிமா (சிங்கம்) என்பது சிலரேனும் அறியும் சொல். ஏழ் என்பது ஏற்றை என்றும் மாறாது :) ஆனால் நால் நாற்றை ஆக இடமுண்டு. ஐ என்றால் ஐந்து என்று பொருள் உண்டு. எனினும் ஐற்றை என்று ஆக இடம் இருக்கின்றதா எனத் தெரியவில்லை. ஐங்கை என்று சொல்ல இடம் இருக்கக்கூடும். இந்த மூற்றை என்பதைக் கட்டாயம் கூடுதலாகப் பயன்படுதலாம். ஒற்றை, இரட்டை, மூற்றை, நாற்றை, ஐங்கை, அறுகை, எழுகை, எண்கை, ஒன்பாற்றை, பாற்றை (< ஒன்பான், பான்) என்று சொல்லக்கூடுமா எனத் தெரியவில்லை. இருபான் என்றால் இருபது. --செல்வா 18:27, 8 மே 2010 (UTC)Reply

செல்வா, நன்றி. மூற்றை என்ற சொல், எனக்குக் குருட்டடியாய் கிடைத்ததே! தமிழ்ப் பேரகரமுதலியைப் பார்ப்பதில் எனக்கு ஆவல் அதிகம். அதிலிருந்து தற்செயலாய் நான் கண்டதை உள்ளிட்டேன். ஐம்பான் = ஐம்பது என்ற பொருளில் பாவாணர் நூலொன்றில் படித்ததாக நினைவு. இருபான் (= இருபது) என்ற சொல் உள்ளது என்றே நினைக்கிறேன். [1]. மேலும், ஆன் என்ற விகுதி பத்தின் மடங்குகளைக் குறிக்கும் சாரியை என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. [2]. எது எவ்வாறாக இருப்பினும், நீங்கள் சொல்லாராயும் பாங்கை எண்ணி வியக்காமல் இருக்க என்னால் இயலவில்லை. --பரிதிமதி 00:52, 10 மே 2010 (இந்திய நேரம்)
பாராட்டுக்கு நன்றி, பரிதிமதி. ஆம் ஐம்பான் என்பது 50 என்று பொருள்படும். --செல்வா 19:48, 9 மே 2010 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:triple&oldid=641382" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "triple" page.