பைய வர அறிவிக்கும், சாலையறிவிப்பு

உரிச்சொல்

தொகு

பைய

  1. மெல்ல, மெதுவாக
பயன்பாடு
  • "பையச் சென்றால் வையத் தாங்கும்" என்பது இந்நாட்டிலே ஒரு பழமொழி. பைய என்றால், மெல்ல என்பது பொருள். "பையப் போ" என்ற சொல் பாண்டிய நாட்டிலே பெருவழக்குடையது. தேவாரத்தில் இச்சொல் ஆளப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் சிவனடியார் திருமடத்தில் தீயோர் வைத்த தீயை அரசனிடம் செலுத்தத் திருவுளங்கொண்ட திருஞானசம்பந்தர், "பையவே சென்று பாண்டியற்கு ஆகவே" எனப் பணித்ததாகத் தேவாரம் கூறும். இத்தகைய சிறந்த ஆட்சியுடைய சொல் இப்போது சென்னை முதலிய இடங்களில் வழங்குவதில்லை. (பழகு தமிழ்: வேருக்கு நீர் வார்த்தவர்கள் -1, இடைமருதூர் கி.மஞ்சுளா, தமிழ்மணி, 14 ஆக 2011)
  • 'பைய' என்ற சொல்லுள்ள திருக்குறள் எண் = 1098.
(காமத்துப்பால்;குறிப்பறிதல்)
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்- slowly
"https://ta.wiktionary.org/w/index.php?title=பைய&oldid=1986804" இலிருந்து மீள்விக்கப்பட்டது