பொச்சை, .

பொச்சை--தொப்பை வயிறு
பொச்சை--புழுக்கூடு
பொச்சை--காடு
சிறுமலை/குன்று
மலை
ஒலிப்பு
(கோப்பு)


பொருள்

தொகு
  1. தொப்பை வயிறு
  2. புழுக்கூடு
  3. பொச்சம்=குற்றம்
  4. பொற்றை=காடு-கரிகாடு-சிறுமலை/குன்று-மலை (கரிகாடு எனில் காடுகளில் மரங்கள் உரசுவதால் தீப்பிடித்து) மரங்கள் கரிந்து போன காடு



மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. pot-belly
  2. Nest of insects
  3. Fault, defect
  4. Forest
  5. Burnt jungle
  6. Hillock
  7. mountain


விளக்கம்

தொகு
  • பொச்சை என்றால் பொச்சம், பொற்றை ஆகிய இரு சொற்களையும் உள்ளடக்கியது...ஆகவே இந்த இரு சொற்களின் எதிரே தரப்படுள்ள அர்த்தங்களும் பொச்சை என்னும் சொல்லுக்கு உரியதாகும்...
  • காடு என்பதன் விளக்கம்: பருத்துயர்ந்த மரங்கள் நெருங்கிய காட்டை வல்லை என்றும், சிறுமரங்கள் மிடைந்த காட்டை இறும்பு, குறுங்காடு என்றும், சிறு தூறுகள் பம்பின காட்டை அரில், அறல், பதுக்கை என்றும், மிக முதிர்ந்த முற்றிப்போன மரங்களையுடைய காட்டை முதை என்றும், மரங்கள் கரிந்து போன காட்டைப் பொச்சை, சுரம், பொதி என்றும், அரசனது காவலில் உள்ள காட்டைக் கணையம், மிளை, அரண் என்றும் பண்டுதொட்டுத் தமிழ் மக்கள் வழங்கி வந்திருக்கின்றனர் (பக் 44). இது 1934 இல் வெளிவந்தது.

[இரா. இளங்குமரன், மறைமலையடிகள், பக்கம் 112, சாகித்திய அக்காதெமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் நூல் வரிசை, 1995]


( மொழிகள் )

சான்றுகள் ---பொச்சை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொச்சை&oldid=1217690" இலிருந்து மீள்விக்கப்பட்டது