மகன்றில்
(கோப்பு) |
- ஒரு வகைப் பறவையினம்.
மகன்றில் என்னும் பறவையினமும் அன்றில் என்னும் பறவையினமும் ஒன்று எனத் தவறாகக் கருதுவர்.பிரிவுத்துன்பத்தை உணர்த்த அன்றில் பறவையும் இணைந்த வாழ்வை உணர்த்த மகன்றில் பறவையும் உவமையாகக் கூறப்பட்டுள்ளன. எனவே, இவை வெவ்வேறு என அறியலாம். மேலும், மகன்றில் நீர்வாழ் பறவை; ஆனால்,அன்றில் பனைமரத்தில் வாழும் பறவையாகும்.
நீர்உறை மகன்றில் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது (குறுந்தொகை: 87: 2-3) என்னும் அடிகளும்
மன்றிடும் பெண்ணை மடல்சேர் அன்றில் (கலித்தொகை: 128: 8)
என்னும் அடியும் இதனை விளக்கும். மகன்றிலின் கால் குறுகியதாக இருக்கும்.
வார்சிறைக்
குறுங்கால் மகன்றில்
என ஐங்குறுநூறு (381: 3-4) கூறுகிறது.
அன்பின் பிணைப்பிற்குஉவமையாக இருதலைப்புள் என்னும் பறவையும் குறிக்கப் பெற்றுள்ளது.
இருதலைப்புள்ளின் ஓருயிரம்மே (கலித்தொகை: 12:5)
ஓருயிர்ப்புள்ளின் இருதலை (கலித்தொகை: 89: 4)
எனக் கலித்தொகை குறிக்கின்றது.)