மசகு எண்ணெய்

மசகு எண்ணெய்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மசகு எண்ணெய், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. இயந்திரங்களில் உராய்வுகளைத் தடுக்கும்/குறைக்கும் எண்ணெய்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. lubricating oil

விளக்கம் தொகு

  • இயந்திரங்களின் உட்புறத்தில் பல அசையும், நகரும், சுழலும் உதிரிபாகங்கள் இருக்கும்...இவை தொடர்ந்து இயங்குவதால் ஒன்றுக்கொன்று உராய்ந்து, தேய்மானம் ஏற்பட்டு இயந்திரத்தின் ஆற்றல் குறைய வாய்ப்பிருக்கிறது...இந்த நிகழ்வைத் தடுக்க உதிரிபாகங்களுக்கிடையே மசகு எண்ணெய் விடுவார்கள்...கொழ கொழப்பான இந்த எண்ணெய் தேய்மானத்தைக் குறைக்கும்...அதனால் இயந்திரத்தின் ஆயுளும் நீடிக்கும்...மேலும் உட்பாகங்களில் ஆணிகள் போன்ற பொருட்கள் துரு பிடிக்காமலும் காக்கும்...இயந்திரங்கள் உள்ள தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் வீட்டு உபயோகத்திற்கும் மசகு என்ணெய் கிடைக்கிறது...இது வீட்டு கதவு, சன்னல்களின் கீல்கள், தையல் இயந்திரம், இரும்பு உபகரணங்கள் போன்றவைகளைக் காக்கப் பயன்படுகிறது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=மசகு_எண்ணெய்&oldid=1224945" இலிருந்து மீள்விக்கப்பட்டது