கணை தொடுக்கும் மதவேள்
கணை தொடுக்கும் மதவேள்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மதவேள் கணை, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. காதற்கடவுள் மன்மதனின் மலரம்பு

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. flower arrows of lord manmatha, the god of love in hindu religion.

விளக்கம் தொகு

காதற்கடவுள் காமனின் (மன்மதனின்/மதவேளின்) மலர்களாலான அம்பு மதவேள் கணை எனப்படுகிறது...இந்த அம்புகளைதான் தன் கரும்பினாலான வில்லிலிருந்து உயிரினங்களின் மேல் எய்து அவை காதற்வயப்பட வைக்கிறார் என்பர்.

இலக்கியம் தொகு

கொடியமத வேள்கைக் ...... கணையாலே...
குரைகணெடு நீலக் ...... கடலாலே
நெடியபுகழ் சோலைக் ...... குயிலாலே
நிலைமைகெடு மானைத் ...... தழுவாயே
கடியரவு பூணர்க் ...... கினியோனே
கலைகள்தெரி மாமெய்ப் ...... புலவோனே
அடியவர்கள் நேசத் ...... துறைவேலா
அறுமுகவி நோதப் ...... பெருமாளே.
[ஸ்ரீ அருணகிரிநாதரின் திருப்புகழ் - பாடல் 1285]

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதவேள்_கணை&oldid=1219839" இலிருந்து மீள்விக்கப்பட்டது