மன்மதக்குஞ்சு

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மன்மதக்குஞ்சு, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. தேவன் மன்மதனோடு ஒப்பிட்டு ஒரு பரிகாசப் பேச்சு.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. a sarcastic word comparing to beautiful Manmatha,the God of love

விளக்கம் தொகு

  • ஒரு பேச்சு மொழி... எவராவது தன்னைப் பேரழகு என்று நினைத்துக்கொண்டு மற்றவர்களை உதாசீனப்படுத்தும்போது அவரைக்கண்டித்து வேறொருவர் 'நீ என்ன பெரிய மன்மதக்குஞ்சா?' என்பர்.இதன் பொருள் அழகுத்தேவதையான மன்மதனின் பிள்ளையா? என்பதாம்.

பயன்பாடு தொகு

  • அந்த கார்த்திகேயனுக்கு வயது கூடிக்கொண்டே போகிறது... இன்னும் தாமதிக்காமல் கலியாணம் செய்துக்கொள்ளக்கூடாதா? அவன் இருக்கும் இலட்சணத்திற்கு வரப்போகும் பெண் அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும் என்று ஆயிரம் சொல்லுகிறான். தனக்குள் தான் ஒரு பெரிய 'மன்மதக்குஞ்சு' என்று நினைப்பு!! !.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மன்மதக்குஞ்சு&oldid=1220474" இலிருந்து மீள்விக்கப்பட்டது