தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மயங்குதல், பெயர்ச்சொல்.
  1. மருளுதல்
  2. பரவசமாதல்
  3. வெறி கொள்ளுதல்
    (எ. கா.) தாமயங்கி யாக்கத்துட் டூங்கி ... வாழ்நாளைப் போக்குவார் (நாலடி. 327)
  4. மாறுபடுதல்
    (எ. கா.) மேனியு முள்ளமு மயங்காத்தேவர் (கல்லா. 82, 30)
  5. நிலையழிதல்
    (எ. கா.) ஆள்பவர் கலக்குற மயங்கிய நன்னாட்டு (மணி. 23, 104)
  6. வருந்துதல்
    (எ. கா.) முயங்கல் விடாஅ விவையென மயங்கி (அகநா. 26)
  7. தாக்கப்படுதல்
    (எ. கா.) காலொடு மயங்கிய கலிழ்கடலென (பரிபா. 8, 31)
  8. சந்தேகமடைதல்
  9. தயங்குதல்
    (எ. கா.) அந்தக் காரியத்தைச் செய்ய மங்குகிறான்
  10. கலத்தல்
  11. போலுதல்
    (எ. கா.) காரிருண் மயங்குமணி மேனியன் (பரிபா. 15, 50)
  12. நெருங்குதல்
    (எ. கா.) முகிழ் மயங்குமுல்லை (பரிபா. 15, 39)
  13. கைகலத்தல்
    (எ. கா.) தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து (புறநா. 19)
  14. அறிவு கெடுதல்
    (எ. கா.) புலான் மயங்கான் (ஏலா. 2)
  15. கலக்கமுறுதல்
    (எ. கா.) மயங்கின வாய்ப்புளும் (பு. வெ. 10, சிறப். 11)
  16. உணர்ச்சியிழத்தல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To be confused, bewildered
  2. To be charmed, allured
  3. To be intoxicated
  4. To be changed, as in one's mind or body
  5. To be ruined, desolated
  6. To be distressed
  7. To be disturbed, tossed about, as sea
  8. To be in doubt
  9. To be overwhelmed with anxiety
  10. To be mixed up
  11. To resemble
  12. To be crowded together
  13. To engage in a fight
  14. To lose one's senses
  15. To be in a state of disorder or confusion
  16. To become unconscious


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மயங்குதல்&oldid=1340196" இலிருந்து மீள்விக்கப்பட்டது