மாங்குயில்
மாங்குயில் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- உடலில் மஞ்சள் நிறமும் இறக்கையில் கறுப்பு நிறமும் கொண்ட பறவை; இது பெரிய மரங்களில் காணப்படும். கூச்சல் நிறைந்த நகரங்களிலும் பூங்காக்களிலும் கூட காணப்படும். தலையில் கறுப்பாக உள்ள மாங்குயில் வேறு இனம், அதன் பெயர் கருந்தலை மாங்குயில்[1]
மொழிபெயர்ப்புகள்
- Golden Oriole, Eurasian Golden Oriole, European Golden Oriole, Oriolus oriolus ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வண்ணாந்துறைகளில் இவை காணப்படுவதால் இதற்கு வண்ணாத்திக் குருவி ( magpie robin )என்றும் ஒரு பெயர் உண்டு. மாங்குயில், மணிப் புறாவை ( spotted dove )அடிக்கடி காண முடிகின்றது. இந்த இடத்தில் உட்கார்ந்தபடியே இதுவரை முப் பத்திமூன்று வகைப் புள்ளினங்களை நாங்கள் பதிவு செய்திருக்கின்றோம். -( சு.தியடோர் பாஸ்கரன், வீட்டைச் சுற்றியும் காட்டுயிர், உயிர்மை.[2])
- சிறைச்சாலையை 'மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை'” என அழைத்தார் புரட்சிப் பாவலர்[3]
(இலக்கியப் பயன்பாடு)
ஆலை யார்புகை முகிலென் றார்ப்பெழச்
சோலை யார்மயில் துள்ளி மாங்குயில்
மாலை யாரிருள் விரும்பு மாக்கள்காண்
மேலை யாரென மெலிந்து தேம்புமால்.
[தேம்பாவணி -வீரமாமுனிவர், முதற்காண்டம் 19][4]
கொட்டும்
மழை தெறித்துவிழும்
மயில்தோகை பூஞ்சிதறல்
மாங்குயிலின் தேன் உதிரும் குரலோ?
மழலை
-தங்கமணி (மார்ச் 2007)[5]
(இலக்கணப் பயன்பாடு)
சான்றுகோள்கள்
தொகு- ↑ "L. Joeseph Reginald, Birds of Singanallur Lake, Coimbatore, Tamil Nadu Zoo, Dec 2007, பக்.2944-2948". மூல முகவரியிலிருந்து 2011-09-29 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-04-20.
- ↑ வீட்டைச் சுற்றியும் காட்டுயிர் - உயிர்மை
- ↑ கே. வேலிறையன், கீற்று, இணைய இதழ் 5 அக்டோபர் 2009
- ↑ தேம்பாவணி -வீரமாமுனிவர் முதற்காண்டம் 19
- ↑ சந்தவசந்தம் கூகுள் குழு
ஆதாரங்கள் ---மாங்குயில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +