தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மாட்டுதல், பெயர்ச்சொல்.
  1. இணைத்தல் (சூடாமணி நிகண்டு)
    (எ. கா.) சிறுபொறி மட்டிய பெருங்கல்லடாஅர் (நற். 19)
  2. தொடுத்தல்
    (எ. கா.) அம்பினை மாட்டியென்னெ (கம்பரா. நிகும்பலை. 96)
  3. செருகுதல்
    (எ. கா.) அடுப்பினின் மாட்டு மிலங்ககில் (காஞ்சிப்பு. நகர. 73)
  4. செலுத்துதல்
    (எ. கா.) வன்னறான் வல்லவெல்லா மாட்டினன் (சீவக. 1274)
  5. உட்கொள்ளுதல்
    (எ. கா.) சொன்மாலையிரைந்து மாட்டிய சிந்தை (திருவிசைப். கருவூ )
  6. கற்றுவல்லனாதல்
    (எ. கா.) கல்வியை மாட்டாராயினும் (புறநா. 57, உரை)
  7. அடித்தல்
    (எ. கா.) வின்முறிய மாட்டானோ(தனிப்பா. 41, 80)
  8. விளக்கு முதலியன கொளுத்துதல்
    (எ. கா.) செய்பெய்து மாட்டிய சுடர் (குறுந். 398)
  9. எரித்தல்
    (எ. கா.) விறகிற் . . . செந்தீ மாட்டி (சிறுபாண். 156)
  10. கூடிய தாதல்
    (எ. கா.) தேவரு நண்ணவு மாட்டா விழுப்பொருளை (திருவாச. 20, 9)
  11. வலிபெறுதல்
    (எ. கா.) மாட்டா மணிதன்றன் (கம்பரா. அதிகா. 270)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்


  1. To fasten on, button, tackle, hook
  2. To fix, attach
  3. To put in, thrust, as fuel
  4. To use, bring into play
  5. To grasp, comprehend
  6. To be proficient in
  7. To beat violently
  8. To kindle, as a fire; to light, as a lamp
  9. To burn
  10. To be able
  11. To be copetent; to have necessary strength


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாட்டுதல்&oldid=1262990" இலிருந்து மீள்விக்கப்பட்டது