மிச்சம் சொச்சம்
மிச்சம் சொச்சம்
சொல் பொருள்
மிச்சம் – மீதம் அல்லது எச்சம் சொச்சம் – மீதத்தைப் பயன்படுத்திய பின்னரும் எஞ்சும் எச்சம்.
விளக்கம்
வீட்டார் உண்டு முடித்தபின் எஞ்சி இருக்கும் உணவு மிச்சமாகும். அம்மிச்ச உணவை எவருக்கோ படைத்துவிட, அவர்க்குப் பின்னே ஒருவர் வந்து கேட்டால் பின்னரும் உணவுக் கலங்களைத் தட்டித் தடவித் தருவது சொச்சமாம். தவசம், பணம் இவற்றிலும் ‘மிச்சம் சொச்சம்’ என்னும் பேச்சு வரும்.