கரிமுகன்-யானையின் முகம்
நான்முகன்-நான்கு முகங்கள்
தசமுகன்-பத்து முகங்கள்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

முகன், .

பொருள்

தொகு
  1. (...போல/மாதிரி)...முகத்தை உடையவன்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. having a face (like elephant, numbers etc.,))

விளக்கம்

தொகு
  • ஒரு முகம் எப்படி, எதுபோல் இருக்கிறது என்பதைச் சுட்ட பொருத்தமான பெயர்ச்சொல், உரிச்சொல் ஆகிவையோடு 'முகம்' என்ற சொல்லைச் சேர்த்து, மேலும் அத்தகைய முகத்தையுடையவர் என்பதைக் குறிக்க முகன் என்ற சொல்லை பயன்படுத்துவர்...கொச்சைமொழியிலும் முகத்தைக் குறிப்பிடும் 'மூஞ்சி' என்ற சொல்லோடு இணைந்த அநேக சொற்கள் பயன்பாட்டிலிருக்கின்றன...எடுத்துக்காட்டாக:-
  • நான்கு முகங்களுடைய பிரம்மன் நான்முகன்
  • ஆறு முகங்களையுடைய முருகன் ஆறுமுகன்
  • பத்து முகங்களையுடைய இராவணன் தசமுகன்
  • கரி(யானை) முகமுடையவன் கரிமுகன் (வினாயகர்)
  • வேழம் (யானை) முகமுடையவன் வேழமுகன் (வினாயகர்)
  • பூழ்க்கை (யானையின் தும்பிக்கை) போன்ற முகமுடையவன் பூழ்க்கைமுகன் (வினாயகர்)
  • குரைக்கும் முகத்தையுடையது குரைமுகன் (நாய்)

(கொச்சைமொழி-)

  • சிடுசிடு என்று முகத்தை வைத்திருப்பவர் சிடுமூஞ்சி
  • 'உம்' என்று மூடியவாய் திறவாமல் இருப்பவர் உம்மண்ணாமூஞ்சி
  • எப்போதும் எதற்காகவாவது அழுதுக்கொண்டிருப்பவர் அழுமூஞ்சி போன்றவை.


( மொழிகள் )

சான்றுகள் ---முகன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=முகன்&oldid=1222511" இலிருந்து மீள்விக்கப்பட்டது