மெய்ம்மயக்கம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
 • மெய்ம்மயக்கம், பெயர்ச்சொல்.
 1. சொற்களில் ஒற்றெழுத்து இயைந்துவருகை (தொல்.எழுத். 22, இளம் பூர.)

தமிழில் இடை எழுத்துக்கள்

தொகு

சொற்பிறப்பு எனும் பகுதி அனைத்துச் சொற்களுக்கும் இடப்பட வேண்டும். இடை எழுத்துக்கள் உருவாக்கம், இங்கு நன்னூல் விதிகளின் படி கொடுக்கப்பட்டு உள்ளது. உதாரணத்துக்கு மக்கள் எனும் சொல்லில் சொற்பிறப்பு பகுதியைக் காணவும்.

 • ஈரொற்றுக்கள்
  1. முதல் மற்றும் ஈறு எழுத்துக்களின் இடையில் ய், ர், ழ் [119] என்னும் மெய்கள் வந்தால் அவற்றைத் தொடர்ந்து க்,ங்,ச்,ஞ்,த்,ந்,ப்,ம் என்னும் ஒற்று எழுத்துக்களும் வரும்.
 • ககர மெய்கள் மயங்கும் இடம்
  1. க்[110 & 118], ங்[111], ட்[113], ற்[113], ண்[114], ன்[114], ய்[116], ர்[116], ழ்[116], ல்[117], ள்[117] என்னும் மெய்களைத் தொடர்ந்து க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ ஆகிய மெய்கள் வரும்
 • ஙகர மெய்கள் மயங்கும் இடம்
  1. ய் [116], ர் [116], ழ் [116], ங் [118] என்னும் மெய்களைத் தொடர்ந்து ங என்னும் எழுத்தும் வரும்.
 • சகர மெய்கள் மயங்கும் இடம்
  1. ச் [110 & 118], ஞ் [112], ட் [113], ற் [113], ண் [114], ன் [114], ய் [116], ர் [116], ழ் [116], ல் [117], ள் [117] என்னும் மெய்களைத் தொடர்ந்து ச,சா,சி,சீ,சு,சூ,செ,சே,சை,சொ,சோ,சௌ என்னும் எழுத்தும் வரும்.
 • ஞகர மெய்கள் மயங்கும் இடம்
  1. ய் //116, ர் //116, ழ் //116 என்னும் மெய்களைத் தொடர்ந்து ஞ,ஞா,ஞெ,ஞொ என்னும் எழுத்தும் வரும்.
  2. ண் //114, ன் //114, ஞ் //118 என்னும் மெய்களைத் தொடர்ந்து ஞ, ஞா, ஞி, ஞீ, ஞு, ஞூ, ஞெ, ஞே, ஞை, ஞொ, ஞோ, ஞௌ என்னும் எழுத்தும் வரும்.
 • டகர மெய்கள் மயங்கும் இடம்
  1. ண் //114 ய் //116 ர் //116 ழ் //116 ட் //118 என்னும் மெய்களைத் தொடர்ந்து ட,டா,டி,டீ,டு,டூ,டெ,டே,டை,டொ,டோ,டௌ என்னும் எழுத்தும் வரும்.
 • ணகர மெய்கள் மயங்கும் இடம்
  1. ய் //116 ர் //116 ழ் //116 ண் //118 என்னும் மெய்களைத் தொடர்ந்து ண, ணா, ணி, ணீ, ணு, ணூ, ணெ, ணே, ணை, ணொ, ணோ, ணௌ என்னும் எழுத்தும் வரும்.
 • தகர மெய்கள் மயங்கும் இடம்
  1. த் //110 118 ந் //112 ய் //116 ர் //116 ழ் //116 என்னும் மெய்களைத் தொடர்ந்து த, தா, தி, தீ, து, தூ, தெ, தே, தை, தொ, தோ, தௌ என்னும் எழுத்தும் வரும்.
 • நகர மெய்கள் மயங்கும் இடம்
  1. ய் //116 ர் //116 ழ் //116 ந் //118 என்னும் மெய்களைத் தொடர்ந்து ந, நா, நி, நீ, நு, நூ, நெ, நே, நை, நொ, நோ, நௌ என்னும் எழுத்தும் வரும்.
 • பகர மெய்கள் மயங்கும் இடம்
  1. ப் //110 & 118 ட் //113 ற் //113 ண் //114 ன் //114 ம் //115 ய் //116 ர் //116 ழ் //116 ல் //117 ள் //117 என்னும் மெய்களைத் தொடர்ந்து ப,பா,பி,பீ,பு,பூ,பெ,பே,பை,பொ,போ,பௌ என்னும் எழுத்தும் வரும்.
 • மகர மெய்கள் மயங்கும் இடம்
  1. ண் //114 ன் //114 ய் //116 ர் //116 ழ் //116 ம் //118 என்னும் மெய்களைத் தொடர்ந்து ம, மா, மி, மீ, மு, மூ, மெ, மே, மை, மொ, மோ, மௌ என்னும் எழுத்தும் வரும்.
 • யகர மெய்கள் மயங்கும் இடம்
  1. ய் //116 ர் //116 ழ் //116 என்னும் மெய்களைத் தொடர்ந்து ய, யா, யு, யூ, யோ, யௌ என்னும் எழுத்தும் வரும்.
  2. வ் //111 ஞ் //112 ந் //112 ண் //114 ன் //114 ம் //115 ய் //116 & 118 ர் //116 ழ் //116 ல் //117 ள் //117 என்னும் மெய்களைத் தொடர்ந்து ய, யா, யி, யீ, யு, யூ, யெ, யே, யை, யொ, யோ, யௌ என்னும் எழுத்தும் வரும்.
 • லகர மெய்கள் மயங்கும் இடம்
  1. ல் //118 என்னும் மெய்களைத் தொடர்ந்து ல, லா, லி, லீ, லு, லூ, லெ, லே, லை, லொ, லோ, லௌ என்னும் எழுத்தும் வரும்.
 • வகர மெய்கள் மயங்கும் இடம்
  1. ய் //116 ர் //116 ழ் //116 என்னும் மெய்களைத் தொடர்ந்து வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ என்னும் எழுத்தும் வரும்.
  2. ண் //114 ன் //114 ம் //115 ல் //117 ள் //117 வ் //118 என்னும் மெய்களைத் தொடர்ந்து வ, வா, வி, வீ, வு, வூ, வெ, வே, வை, வொ, வோ, வௌ என்னும் எழுத்தும் வரும்.
 • ளகர மெய்கள் மயங்கும் இடம்
  1. ள் //118 என்னும் மெய்களைத் தொடர்ந்து ள, ளா, ளி, ளீ, ளு, ளூ, ளெ, ளே, ளை, ளொ, ளோ, ளௌ என்னும் எழுத்தும் வரும்.
 • றகர மெய்கள் மயங்கும் இடம்
  1. ன் //114 ற் //118 என்னும் மெய்களைத் தொடர்ந்து ற, றா, றி, றீ, று, றூ, றெ, றே, றை, றொ, றோ, றௌ என்னும் எழுத்தும் வரும்.
 • னகர மெய்கள் மயங்கும் இடம்
  1. ன் //118 என்னும் மெய்களைத் தொடர்ந்து ன, னா, னி, னீ, னு, னூ, னெ, னே, னை, னொ, னோ, னௌ என்னும் எழுத்தும் வரும்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
 • ஆங்கிலம்
 1. Agreement between successive consonants, in words( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெய்ம்மயக்கம்&oldid=1887304" இலிருந்து மீள்விக்கப்பட்டது