மொட்டைத்தலை

மொட்டைத்தலை--முடி மழிப்பால் மொட்டை
மொட்டைத்தலை--வழுக்கையால் மொட்டை

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மொட்டைத்தலை, .

பொருள்

தொகு
  1. முடிமழித்த தலை
  2. வழுக்கைத்தலை

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. bald or shaven head

விளக்கம்

தொகு

மொட்டை + தலை = மொட்டைத்தலை...தெய்வங்களுக்கு வேண்டுதல் பேரிலோ, நோயுற்றதாலோ அல்லது சௌகரியத்திற்காகவோ முடியை முற்றிலும் சிரைத்தத் தலைக்கும், அல்லது இயற்கையாகவே முடியெல்லாம் உதிர்ந்து வழுக்கையான தலைக்கும் மொட்டைத் தலை என்று பெயர்.


  • பழமொழி='மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டாற்போல'...பொருள்: மொட்டைத்தலையிலும், முழங்காலிலும் முடிச்சுபோட ஏதுவான இடங்கள் இல்லாதபோது இந்த இடங்களை இணைத்து முடிச்சுப் போட்டால் இணையாது, பிரிந்துவிடும் என்றுப் பொருள்..எனவே பொருந்தாத விடங்களைப் பற்றி பேசும்போது, இந்தப் பழமொழி பயனாகிறது...

பயன்பாடு

தொகு
  • என்ன? சுந்தரும், கண்ணனும் நண்பர்களா?..நம்பவே முடியவில்லையே..'மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டாற்போல' இருக்கிறது...சிறிது நாட்களில் பிரிந்துவிடுவார்கள்.நீ வேண்டுமானால் பார்!

"https://ta.wiktionary.org/w/index.php?title=மொட்டைத்தலை&oldid=1224451" இலிருந்து மீள்விக்கப்பட்டது